பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 9

விளக்கில் எண்ணெய் தான் இல்லையோ, அல்லது வேறு கோளாறு தானே. டபுக், டபுக் என்று ஒளி இரண்டு மூன்று தரம் திரியில் குதித்தது.

‘இது ஏன் இப்படி குதிக்குது?’ என்று ஆச்சர்யப் பட்டாள் வள்ளி. அவள் கேட்டு வாய் மூடுவதற்குள், விளக்கு அணைந்துவிட்டது. மண்ணெண்ணெய் நாற்றம் எங்கும் நிறைந்து நின்றது. “தாத்தா, விளக்கு அனஞ்சி போச்சே?” என்றாள் அவள்.

“ஆமா ஆமா. எண்ணெய் இருந்திருக்காது. அதுனாலே’ என்ன? துரங்க வேண்டிய நேரம்தானே?”

வள்ளி சிறிதுநேரம் பேசாமல் கிடந்தாள். பிறகு தொணதொணப்பைத் தொடர்ந்தர்ள். -

‘அங்கே என்னமோ சத்தம் கேக்குதே, அது என்னதா யிருக்கும்? எலியா இருக்குமோ? அல்லது, பூனையா? நம்ம மேலே வந்து விழுமோ?’ என்றாள். “தாத்தா, அப்பாவும் அம்மையும் என்னை விட்டுட்டுப் போயிருவாங்களோ? அவங்க திரும்பி வரலேன்னு சொன்னா, நான் என்ன பண்ணுவேன்?” - -

பெரியவருக்கு எரிச்சல் வந்தது. ‘ஏண்டி, வாயை மூடிக் கிட்டுக் கிடக்க மாட்டே? நீயும் உங்க அம்மைகூடப் போயி ருக்க வேண்டியதுதானே? இங்கேயே தான் இருப்பேன்னு ஏன் அடம்புடிச்சே?’ என்று வெடுவெடுத்தார்.

வள்ளி வாய் திறக்கவில்லை. ஆனால் தூங்கவும். இல்லை. வெளியே, தொழுவத்தின் தகரக் கொட்டைகை மீது டப்டுப் என்று ஓசை எழுந்தது. பருமனான மழைத் துளிகள் விழுந்தன. “தாத்தா... தாத்தா’ என்று மெதுவாகக் குரல் கொடுத்தாள் வள்ளி!