பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 2

சுளை விழுங்கியின் முயற்சி நல்ல பலனளித்தது. திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது.

பெரிய விழா நிகழ்ந்தது. கேடயம், தகதகவென மிளிர, வள்ளல் கலை அரசு அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

தோழர் சுளைவிழுங்கி கேடயத்தின் மதிப்பு பல ஆயிரம் என்று ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டார். மொத்தம் எவ்வளவு வசூல் ஆயிற்று. என்ன செலவு ஆயிற்று. மீதம் எவ்வளவு என்று அவர் வெளியிடவில்லை.

பல மாதங்களுக்குப் பிறகு, நாட்டின் நெருக்கடியைத் தவிர்க்க பொதுநிதி திரட்டப்பட்டது. மக்களின் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மாபெரும் தலைவர் நிதி கேட்டார். தங்கமும் வெள்ளியும் பணமும் வந்து குவிந்தன. -

வள்ளல் கலைஅரசு சும்மா இருப்பாரா? தனக்கென எதுவும் வைத்துக் கொள்ள ஆசைப்படாத - தன்னிடமுள்ள எதையும் எடுத்துக் கொடுத்துவிடச் சித்தமாக உள்ள கர்ணன் இல்லையா அவர்? மக்கள் எனக்கு அன்புடன் அளித்த தங்கக் கேடயத்தை நாட்டின் நலத்துக்காக நான் மனமுவந்து அளிக்கிறேன்’ என்று விளம்பரம் செய்தார். அதற்காக ஒரு விசேஷ நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதை அறிந்த சுளைவிழுங்கி திடுக்கிட்டார். இது ஏதடா ஆபத்து!” என்று பதறினார். தனக்கும், கலை அரசுவுக்கும் ‘ரொம்பவும் வேண்டிய ஒரு பெரியவரை அணுகி விஷயத்தைச் சொன்னார். ‘கேடயம் கைவிட்டுப் போனால் உண்மை அம்பலமாகி விடும். அது சுத்தத் தங்கத்தினால் செய்யப்பட்ட வில்லை. அதில் உள்ளவை வைரக் கற்களும் இல்லை. தங்கமுலாம் பூசப்பட்டு, மலிவான போலிக்கற்கள் பதிக்கப் பெற்றுள்ள அதன் மதிப்பு பல ஆயிரங்களும் இல்லை. இதெல்லாம் வெளியே தெரிந்தால் கேவலம்’ என்று அழாக்குறையாகக் கெஞ்சினார்.