பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 புண்ணியம் ஆம் பாவம்போம்!

பெரியவர்தான் விழாவுக்குத் தலைமை வகிப்பதாக ஏற்பாடு. அவர் நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று சொன் னார். பிறகு இரண்டுபேரும் திட்டமிட்டு, சில பணமூட்டை களை தாஜா செய்து ஒரு பெரும் தொகை நிதியாகப் பெற்றுக் கொண்டு, கேடய அளிப்பு விழாவுக்கு வந்தார்கள்.

வள்ளல் பெருமையாகப் பேசி கேடயத்தை பொது நிதிக்குத் தந்துவிடும்படி தலைவரிடம் கொடுத்தார். தலைவர், வள்ளலின் கொடைத் தன்மையைப் பாராட்டினார். மக்கள் அன்பின் காணிக்கையாக அளித்த பரிசு இது. இதை வள்ளல் மனமுவந்து நாட்டின் நலனுக்கு அளிக்கிறார். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. அன்பின் பரிசான இது நமது அன்புக்கு உரியவரிடம் இருக்க வேண்டும் என்று தானே நாம் ஆசைப்படுவோம் 2 ஆகவே, வசதி உள்ளவர் எவரேனும் முன் வந்து கேடயத்தை விலை கொடுத்துப் பெறத் தயாராக இருந்தால், அந்த விலையை பொதுநிதிக்குத் தந்துவிட்டு, கேடயத்தை கலை அரசு அவர்களிடமே அளிப்போம், இதோ ஏலம் கூறுகிறேன்’ என்றார்.

எல்லாம் முன்னேற்பாட்டின் படியே நிகழ்ந்தன. ஒரு செல்வர், பெரும் தொகையைக் கொடுத்தார். திட்டமிட்டு, தலைவர் சிலரிடமிருந்து வாங்கி வந்து, அவரிடம் முன்ன தாகவே கொடுத்து வைத்திருந்த பணம்தான் அது.

அத்தொகை நிதிக்கு அளிக்கப்பட்டது. கேடயம் இரண்டாவது முறையாக வள்ளலுக்கு அளிக்கப்பட்டது.

சில வருஷங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. பொதுநிதி திரட்டப்பட்டது. மக்கள் தங்கமும் பணமும் உதவினர். வழக்கம்போல் வள்ளலும் முன்வந்தார். தங்கக் கேடயத்தை நிதிக்குத் தருவேன் என்று விளம்பரம் செய்தார். . -