பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. ஆறும், அழகிய சொக்கரும்

பிழைப்புக்காக பட்டணத்தில் தங்கியிருந்த அழகு சொக்குப் பிள்ளைக்கு சொந்த ஊரான மணலூருக்குப் போவது என்றாலே தனி உற்சாகம்.

ஊருக்குப் போவது என்று தீர்மானித்த உடனேயே அவர் மனசு கும்மாளி போடும். ஆ, தினசரி ரெண்டு வேளையும் ஆற்றிலே முங்கிக் குளிக்கலம் என்று.

அழகிய சொக்கர் என்ற பெயரை அவர் ஊர்க்காரர்கள் அழகு சொக்குப்பிள்ளை என்று தான் சொல்லி வந்தார்கள். அதில் அவருக்கு வருத்தம் ஒன்றும்இல்லை.

அழகான சிற்றுாரான அவர் ஊருக்குப் பொருத்தம் இல்லாத ஒரு பாடாவதிப் பெயராக மணலூர் என்று வந்து வாய்த்ததே என்கிற வருத்தம் அவருக்கு உண்டு.

அழகு சொக்குப் பிள்ளைக்கு அவருடைய ஊர் மீது அபாரமான பற்றுதல் என்று அவ்ஊர்க்காரர்கள் நம்பினார்கள். அதனால்தான் வசதிகள் மிகுந்த பட்டணத்தை விடுப் போட்டு, வருடம் தோறும் இந்தப் பட்டிக்காட்டுக்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் தங்கிப் போகிறார் என்று அவர்கள் கருதினார்கள்.