பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

வல்லிக்கண்ணன


2

i

5

‘உங்க ஊர் பேரிலே உங்களுக்கு ரொம்பப் பிரியமோ அண்ணாச்சி? இங்கே வந்து இப்படி ஹாயா இருக்கிகளே!?’ என்று தம்பிச்சி எவராவது அவரிடம் அவ்வப்போது கூறுவது உண்டு.

அவ்வேளையில் அழகு சொக்கு அலட்சியமாக ஒரு சிரிப்பு சிரிப்பார். பிரியமா எனக்கா இந்த ஊர் பேரிலேயா? அஹஹ அப்படிப் பந்தமோ பாசமோ ஏற்பட்டு விடும்படியா இந்த ஊரிலே என்ன இருக்கு? என்பார்.

‘பின்னே வருடம் தவறாம இந்த ஊருக்கு வாlக; மூணு நாலு மாசம் தங்குறீங்க?’ என்று தம்பியாபிள்ளை இழுப்பார்.

அது வந்து தம்பி, ஊருக்குப் பக்கத்திலே ஒடுதே ஆறு, அது மேலே எனக்கு ஒரு ஒட்டுதல். சின்ன வயசிலே இருந்தே இந்த ஆற்றுமேலே எனக்கு ரொம்ப ஆசை. எனக்கு இது வெறும் ஆறு இல்லே. என்னை ஈர்க்கிற தனி சக்தி அது. இந்த ஆற்றிலே குளிப்பது ஒரு சுகம். இனிய ஆனந்தம். அதுக்கு இணையான சந்தோஷம் வேறு எதுவுமே கிடையாது’ என்று உற்சாகமாக விவரிக்க ஆரம்பித்து விடுவார்.

ஆற்று நீரில் அமிழ்ந்தபடி அழகிய சொக்கர் அளப்பதை கேட்டிராதவர்கள் எவருமே இருக்க முடியாது.

‘பட்டணம் பட்டணமின்னு பறக்கிறாக, பட்டணத்திலே இப்படி குளிக்க வசதி உண்டுமா? ஒரு பக்கெட் தண்ணியிலே உடலை நனைச்சிப் போட்டு, குளிச்சாச்சுயின்னு நம்மளை நாமே ஏமாத்திக்கிடுறதுதான் பட்டிணத்துக் குளியல் இந்த ஆத்திலே நீராடுகிற சுகம் வேறே எங்கே வரும்?’ என்ற ரீதியில் பேசிக் கொண்டே முழுக்கு போடுவார். சீக்கிரம் கரையேற மாட்டார்.

அந்த ஆற்றின் மீது அவ்வளவு மோகம் அவருக்கு. ஆறு

அவருக்கு உற்ற சிநேகிதி. இனிய தோழி. அருமையான துணை. -