பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 & புண்ணியம் ஆம் பாவம்போம்!

காலப் போக்கில் அந்த ஆறுகூட அழகு குலைந்து போனதே என்ற தவிப்பு அவருள் என்றும் இருந்தது. சின்ன வயசிலே ஆறு எப்படி இருந்தது! வெள்ளி குருத்துபோல மணல் பரவிக் கிடக்கும். நடுவிலே அழகா, களங்கமில்லாமல், தண்ணீர் வளைந்து நெளிந்து ஒடிக்கொண்டிருக்கும். பிறகு நாணலும் என்னென்னவோ புல்லுவகைகளும் முளைச்சி அடர்ந்து வளர்ந்து ஆற்றின் அழகைக் கெடுத்தது. அப்புறம் மேற்கே மலையூரிலே, அணைகட்டி ஆற்றை மறிச்சு என்னமோ பண்ணி வச்சாங்க. அன்றிலிருந்து எல்லாம் கெட்டுது பேர். மணல் இல்லாமப் போச்சு. தண்ணீர் அழுக்கும் சாக்கடையுமா ஆச்சு. கரை நெடுக முள்ளு மரங்கள் மண்டி வளர்ந்தன. மழை காலத்திலே வெள்ளம் வரும். அது வற்றிய பிறகு சேறும் சகதியுமா ஆற்றுப் படுகையே மோசமாயிடும்.

இவ்விதம் அழகு சொக்குப் பிள்ளை குறை கூறுவது வழக்கம். இருந்தாலும் ஆற்றின் மீது அவருக்கிருந்த பற்றுதல் வற்றிப் போகவில்லை. கேட்க ஆள் கிடைத்து விட்டால், அவர் பாட்டுக்கு அலுக்காமல் பேசிக்கொண்டேயிருப்பார். ஆற்றைப் பற்றித்தான். •

‘இந்த ஆற்றிலே வெள்ளம் புரண்டு ஓடுவதை பார்க்கணுமே. ஆஹ், என்ன ஒய்யாரமான காட்சி இருகரையும் பொழிஞ்சு, தண்ணி அசைவது தெரியாம ஓடும். ஏதாவது கொப்பு கிளை மிதந்து வரும்போதுதான் வெள்ளம் எவ்வளவு வேகமாக ஓடுது என்பது புரியும். அதோ அங்கே மண்டபம் இருக்குதே, அதிலே மோதி வெள்ளம் பிரிஞ்சு அலை புரண்டு முன்னேறதை எவ்வளவு நேரம் வேணும்னாலும் பார்த்துக் கிட்டே நிக்கலாம். அப்படி ஒரு மிடுக்கு, ஒரு கம்பீரம். படைகள் நகர்ந்து போறமாதிரி, யானைகள் சாடி முன்னேறுகிற மாதிரி, வெள்ளப் பெருக்கு துங்கும் நுரையுமா, கண்டது எல்லாம் இழுத்து கிட்டுப் போகும். ஏயம்மா, எவ்வளவு தண்ணி, இவ்வளவு நீரும் இத்தனை நாளா எங்கிருந்தது? இப்ப