பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 புண்ணியம் ஆம் பாவம்போம்!

‘ஐம்ங் ?”

“அது என்ன சத்தம்? திருட்டுப் பயல் போலிருக்கு”

மழை சடசடவென்று பெய்யத் தொடங்கியது. ‘மழை தான் பெய்யுது, தகரத்து மேலே மழை விழுற சத்தம்தான்...” சிறிது நேரத்தில் மழை நின்று விட்டது. நாய் குரைத்தது. இன்னொரு நாய் பதிலுக்குக் குரைத்தது.

“தாத்தா...’ . . -

அவர் பேசவில்லை. தூக்கக் கிறக்கம்.

‘பயமாருக்கே... அம்மா!’

ஆந்தையின் அலறல் கோராமாகக் கேட்டது. இருட்டில் வீட்டினுள் எது எதுவோ நடமாடுவதுபோல் தோன்றியது அவளுக்கு கள்ளப்பயல் பேய் பூனை பாம்பு அவள் மனம் தறி கெட்டு ஓடியது.

“தாத்தா தாத்தா...’ -

எலி ஒன்று விழுந்தடித்து ஓடிவந்து அவள்மீது ஏறிக் குதித்துத் துள்ளிச் சென்றது. “தாத்தா என்று பயங்கரமாகக் கூச்சலிட்டாள் அவள். அவர் என்னவோ ஏதோ என்று திடுக்கிட்டுப் பதறி எழுந்தார்.

“மேலே என்னமோ விழுந்து ஓடிச்சு’ என்று பயத்தோடு புலம்பினாள் பேத்தி. -

‘எலியாயிருக்கும்... இப்படி என் பக்கத்திலே வந்து படுத்துக்கோ என்று அவர் அவளை அருகில் அழைத்து தைரியம் ஊட்டினார். எனினும் அவள் நெஞ்சுதிக் திக்கென்று அடித்துக் கொண்டுதான் இருந்தது.

‘இருட்டைக் கண்டு சின்னப்புள்ளைக்கு ஏன்தான் இந்தப் பயமோ? குப்புறப் படுத்து தலையணையிலே