பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 புண்ணியம் ஆம் பாவம்போம்:

உற்பத்தி ஆகி, சிறு ஒடை போல் நகர்ந்து பெரிதாகி, ஒரு இடத்தில் அருவியாய் விழுந்து, தரையில் நதியாய் நெளிந்து நடந்து முன்னேறிச் செல்வதை கண்ணாறக் காண வேண்டும் என்பது. கரை மீதாகவே நடந்து ஆற்றின் வளர்ச்சியை ஊர் ஊராகப் போய் பார்க்க வேண்டும். கடைசி சங்கமுகம் வரைப் போய் கடலோடு சங்கமிப்பதை தரிசிக்க வேண்டும்.

இது நிறைவேறாத ஆசையாகவே இருந்தது. கூட வருவதற்கு ஒன்றிரண்டு பேர் துணை சேர்ந்திருந்தால், அவர் இத்திட்டத்தை நிறைவேற்றியிருப்பார். யாரும் அவருடன் சேர்ந்து வரத் தயாராகவில்லை.

ஆயினும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில், ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு, அழகிய சொக்கர் சில சில ஊர்களுக்குப் போக நேர்ந்தபோது, அங்கங்கே உள்ள ஆற்றுப் பகுதிக்குப் போகத் தவறியதில்லை. இதன் மூலம் ஆற்றின் பல முகங்களை அவர் காண முடிந்தது. அதில் ஒரு திருப்தி அடைந்தார் அவர். -

இந்த வருடம் வழக்கமான உற்சாகத்துடன் ஊர் வந்து சேர்ந்தார் பிள்ளை. காலையிலும் மாலையிலும் ஆற்றுக்குப் போனார். புல்தரையில் சிறிது நேரம் படுத்துக் கிடந்த பிறகு, ஆற்று நீரில் வெகுநேரம் குளித்து மகிழ்ந்தார்.

நாட்கள் மனோகரமாக ஓடின.

ஒருநாள் அவர் உறவினர் ஒருவர், ‘நான் மேற்கே போறேன். அந்த ஊரும் அங்கே உள்ள ஆறும் விசேஷ மானவை. புண்ணிய ஸ்தலம். நீங்களும் வாங்களேன் என்று அழைத்தார்.

அழகிய சொக்கரும் அவருடன் போனார். கோயிலும் சூழ்நிலையும் மனோரம்மியமாக இருந்தன. கோயிலை ஒட்டிய ஆறும் படித்துறையும் வசீகரமாக அமைந்திருந்தன.