பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 29

குளித்து விட்டு கோயிலுக்குள் போய் சாமி தரிசனம் பண்ணலாம் என்றார் உறவினர்.

அவ்வேளையில், ஒரு நிகழ்ச்சி அழகு சொக்குவை பதை பதைக்க வைத்தது.

படித்துறைக்கு சற்று தள்ளி வழக்கமாக ஆட்கள் குளிக்கிற இடத்தை விட்டு விலகி - ஒரு இடத்தில் ஒரு சிறுபெண் ஆற்றில் இறங்கியவள் பயத்தோடு அலறினாள். அவள் உடல் உள்ளே ஆழ்ந்து கொண்டிருந்தது. அவளைப் பிடித்து இழுக்க முயன்று கொண்டிருந்தான் ஒருவன். அவனும் ஆற்றுக்குள் ஆழ்த்து கொண்டிருந்தான்.

பதறிப் போன பிள்ளை அவர்களுக்கு உதவ முன்னே பாய்ந்தார். -

‘அண்ணாச்சி... அண்ணாச்சி... போகாதீங்க... அது புதை மணல் உள்ள இடம். சொறிமணல் ஆளை உள்ளே இழுத்திரும் அண்ணாச்சி...” ‘.

உறவினர் அலறினார்.

- ஆனால் அழகுசொக்கு ஆவேசமாகப் பாய்ந்து அந்த இடத்தில் காலூன்றினார். புதைந்து கொண்டிருந்த ஆளைப் பிடித்து இழுக்க முயன்றார். அம்முயற்சியிலேயே அவரும் ஆற்றினுள் புதைந்து போனார்.

ஐயோ அண்ணாச்சி என்று கதறினார் உறவுக்காரர். அந்த இடத்தில் சிறு கும்பல் கூடியது.

‘இந்த ஆத்திலே இந்த இடம் சண்டாளமில்லா எத்தனை உசிருகளை காவு கொண்டிருக்கு இன்னிக்கே மூணு உசிருக பலியாயிட்டிதே’ என்று புலம்பினார் ஒருவர்.