பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 புண்ணியம் ஆம் பாவம்போம்:

4

நடக்க நடக்க, உயர்ந்து செல்லும் தனிப் பாதையில் மேலே ஏற ஏற, இந்தச் சிறுைைம உணர்வு. வலுப்பெற்றது. அது ஏன் - என்னது என உணர முடியா ஒருவிதக் குழப்பத்தை - அர்த்தம் புரிந்து கொள்ள முடியாத ஒரு பீதியை அவனுக்குள் பரவச் செய்தது. -

அது பகல் நேரம்தான். வெயில் ஒளிமயமாய்ப் படிந்து கிடந்தது. சூழ்நிலை - மலைப்பகுதிகள் மரங்கள், உயர்வானம் - எல்லாம் பளீரெனப் பிரகாசித்தன. அவை அவனுடைய வெறுமையை, மனிதனின் சிறுமையை, தனக்கு எடுத்துக் காட்டுவதாகவே பெருமாளுக்குத் தோன்றியது. அவனுள் ஒரு வேதனை - அமைதியற்ற தன்மை அழுத்தியது. திக்குத் தெரியாத பெரும் வெளியில் துணையற்று விடப்பட்ட சிறு பிள்ளை என அவன் தன்னை உணர்ந்தான். தனக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலையில், ராட்சதத்தனமான சுற்றுப்புறத்தில், செயலற்ற தன்மையில் தனித்து விடப்பட்ட ஒரு பரிதாப நிலையில் அவன் இருப்பதாக அவன் மனம் கருதியது.

அந்த நிலை அவனது சோகத்தை அதிகப்படுத்தியது. ஓங்கி ஓங்கி வீசி எழும் அலைகள் புரளும் கடல் ஒரத்தில் முன்பொரு சமயம் அவன் அப்படித்தான் உணர்ந்தான். பாலை என விரிந்து கிடந்த ஒரு மணற் பெருவெளியில் ஒரு சந்தர்ப்பத்தில் இத்தகைய உணர்வு அவனை இப்படித் தாக்கியதுண்டு. இப்போது இந்த நீண்ட நெடிதுயர்ந்த தனிமையின் ஆழ்ந்த அகன்ற உயர் சூழலில் பெருமாள் பெரிதும் பாதிக்கப் பட்டான்.

எதுவும் செய்யத் திராணியற்ற் சிறுபிள்ளையாய்த் திகைத்து விட்டபெருமாள், இப்போது அழுதான். பொங்கிப் பொங்கி அழுகை எழ, அப்பாவியென அழுதுகொண்டே அவன் நடந்தான்.