பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

3.

226 புண்ணியம் ஆம் பாவம்போம்!

வந்தோமா? மேல் மலையை, நம்பி கோயிலை, அந்தி நேரத்திலே அடைந்து விட்டோம். ராத்திரி அங்கே உள்ள செங்கத்தேறி கட்டடத்திலே தங்கினோம். ஏ. பெருமாள். மலைமீது ராத்திரி வேளையில் தங்கியிருப்பது எவ்வளவு அற்புதமான அனுபவம் தெரியுமா? ஆகா, குளிர், பனிப் படலம் அருமையான நிலா ஒளி. எங்கும் அமைதி. ஆனாலும் உண்மையான அமைதி கிடையாது.

விதவிதமான பூச்சிகள் வண்டுகள் ஓயாமல் இரைச் சலிட்டுக் கொண்டே இருக்கின்றன. ரகம் ரகமான ஒலிகளின் கலவை. திடீர்னு இராப் பறவை ஒன்று அலறுது. ஏதோ ஒரு மிருகம் கத்துது. துரத்திலே ஒடுகிற ஆற்றுத் தண்ணிர், மேட்டிலிருந்து பள்ளத்தில் விழுகிற ஒசை... அது ஒடுகிற மெல்லொலி பின்னணி இசைபோல ஒலித்துக் கொண்டே பிருக்கிறது...

‘பெருமாள்! நீ கவனிச்சியா? எங்கும் வளர்ந்து நிற்கிற மரங்கள். செறிவாகத் தென்படுகிற பசுமைப் பரப்பு. செடி கொடிகள். மலையின் பகுதிகள். தூரத்து மலைமுடிகள். இந்த வானம்... இதெல்லாம் எவ்வளவோ ஆனந்தத்தை உண்டாக் குது. மனம் விசாலமாகி, இயற்கையோடு சேர்ந்து, உயிரே உயிரே பறக்கத் தொடங்குது. இந்த மண்ணும், மலையும், மரமும், வானமும் நம்மோடு சொந்தம் கொண்டாடுகிற மாதிரித் தோணலையா? நாமும் இவற்றுடன் உயர்ந்து நிற்கிற மாதிரி - இந்த மலையெலாம் நான்; மரங்களும் விண்ணும் நான்: எல்லாமே நான் என்று பெருமைப்பட வைக்கிற ஓர் உணர்வு நம்முள் சிலிர்த்தெழுகிறது. இந்த மலையை, மண்ணை, அருவியை, விண்ணை, மனித சமுதாயத்தை அப்படியே தழுவிக் கொள்ளவேண்டும் என்றோர் எழுச்சி ஏற்படுகிறதே. நீ ஏன் வருத்தமா இருக்கிறே, பெருமாள்? ரொம்ப நேரமா நீ அழுகிற மாதிரித் தெரியுதே? ஏன் அழறே?"