பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 227

பெருமாள் பெருமூச்செறிந்தான்.

“பூசை செய்ய வந்தவங்க முக்கியமான பூசைச் சாமான் இரண்டை எடுத்திட்டு வர மறந்து போனாங்க. என்னை அனுப்பியிருக்காங்க, கீழே போயி அதுகளைக் கொண்டுவர” என்றான் கைலாசம்,

“இதோ இருக்கு கீழே உள்ளவங்கதான் என்கிட்டே கொடுத்து அனுப்பினாங்க’ என்று பெருமாள் பையை நீட்டினான்.

“நல்லதாப் போச்சு. வா, கோயிலுக்குப் போவோம்’ என்று அவனை அழைத்தபடி திரும்பி நடந்தான் கைலாசம்.

போகிறபோதே அவன் மலையின் கம்பீரத்தை, அதன் வனப்பை வியந்து பேசினான், மலை மட்டுமல்ல; கடலும், வானின் விரிவும், இயற்கையின் எடுப்பான, மிடுக்கான, வனப்பான சக்திகள் பலவும் இன்னும் கிளர்ச்சி ஏற்படுத்தும். மனிதன் இவற்றோடு இணைந்தவன், இவற்றால் ஆனவன், இவற்றை ரசித்துப் பயன்படுத்தி அனுபவிக்கக் கற்றவன் என்ற பெருமித உணர்வு எனக்குள் உண்டாகும். உனக்கு எப்படியோ?” என்று பெருமாள் முகத்தைப் பார்த்தான்.

‘'நான் சாதாரண ஆளப்பா. நீ கவிஞன். கவிதை

எழுதாவிட்டாலும், கவிஞனாக வாழ்கிறவன்” என்று பெருமாள் சொன்னான். .

காசுகளைக் குலுக்கிப் போட்டது போல், கலகலவெனச்

சிரித்தான் கைலாசம்.