பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. மன தைரியம்!

ஆச்சி, பொழுது விடியறதுக்கு முன்னால் நீ ஆத்துக்குப் போவையில்லா, அப்ப என்னையும் கூப்பிடு. நானும உன்கூட ஆத்துக்கு வாறேன் ஆச்சி! - தெரு வாசலில் நின்று கொண்டு சிவகாமி உரத்த குரலில் பேசினாள்.

வீட்டுக்குள் இருந்த வள்ளி ஆச்சிக்கு எரிச்சல் ஏற்பட்டது. ’ஏ கூறுெெகட்ட கோப்புரம் வாசல்லே நின்னுக்கிட்டு ஏன்ட்டி இப்படிக் கத்துதே?’ என்று நீட்டி முழக்கினாள்.

பக்கத்து வீட்டுப் பேத்தி மூஞ்சியை சுளித்தாள். நீ வீட்டக்குள்ளே இருந்துக் கிட்டு கத்துறது எட்டு வீட்டுக்கு கேக்கு. நான் சத்தம் போட்டு பேசுனதிலேதான் பொத்துக்கிட்டு தாக்கும்’ என்று குறை கூறினாள்.

அதுக்கில்லேட்டி. சித்தெ உள்ளே வா, நான் சொல்லு தேன்,’ என்று பிரியமாக அழைத்தாள் ஆச்சி.

என்ன விசயம்னுதான் தெரிஞ்சுக்கிடலாமே என்று மனம் முண முணக்க, செல்ல நடை நடந்து சிவகாமி உள்ளே போனாள். என்ன ஆச்சி? என்று கேட்டாள்.