பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

3

2


புண்ணியம் ஆம் பாவம்போம்!

அதுக்கு நாம என்ன ஆச்சி பண்ண முடியும்? காலம் செய் கோலம் காலத்துக்கு தக்கபடிதான் மனுசங்களும் நடந்துக் கிடுறாங்க, என்று பெரியதனம் பண்ணினாள் பேத்தி.

‘மாரியாபிள்ளை தோட்டம் பெரிசு. பக்கத்து தோட்டத் தையும் சேர்த்து பயிரு பண்ணியிருந்தாரு அவரு. அதுனாலே ரொம்ப நேரம் தண்ணி இறைக்கணும். துலாவினாலேதான். கிணத்திலே இருந்து தண்ணி இறைச்சுக் கொட்டும் ஒரு ஆளு. ஒருத்தரு பாத்திகளுக்கு சீரா தண்ணி பாய விடும். வெள்ளங் காட்டிலே வேலைக்குப் போயிருவாங்க. தெக்குத் தெரு மாடசாமி மாரியாபிள்ளைக்கு ஒத்தாசை பண்றது வழக்கம்.

“ஒரு தரம் முந்திக் கருக்கல்லே ரெண்டு பேரும் வெளித் திண்ணையிலே இருந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. அப்ப மாடசாமி கேட்டான், நாளைக்கி கீரைக்கு தண்ணி இறைக்க வேண்டிய முறை இல்லியா அண்ணாச்சின்னு. ஆமா, மாடசாமி நாளைக்கு வெள்ளி முளைக்கதுக்கு முன்னாடியே வந்திரு சீக்கிரமே போயி பாய்ச்சிப் போடுவோம். வெயிலு வாறதுக்கு முன்னாடி வேலை முடிஞ்சிரும்னு மாரியா பிள்ளை சொன்னாரு மாடசாமியும், சரி அண்ணாச்சி, அதிகாலை யிலேயே வந்து குரல் கொடுக்கே’ன்னு சொல்லிட்டுப் போனான். ரெண்டு பேரும் .சத்தமாத்தான்பேசினாங்க. நம்ம ஊரிலே யாரு மெதுவா பேசுறாங்க? பொதுவா எல்லாருமே தொண்டைத் தண்ணி வ்த்தி ராப்லே கத்திக் கத்தித்தானே பேசுறாங்க, இல்லையா?”

ஊம்ம் கொட்டினாள் பேத்தி. அதிகாலையிலே மாடசாமி வந்து மாரியாபிள்ளையை எழுப்பினாராக்கும்?”

அங்கேதான் இருக்குது விசயம் என்றாள் ஆச்சி. ‘விடிய துக்கு ரொம்ப நேரம் கிடந்தது. அண்ணாச்சி, அண்ணாச்சி யோவ் கூப்பிடும் குரல் கேட்டு அரக்கப் பரக்க எழுந்திருச்சாரு