பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 233

மாரியா பிள்ளை. பணியும், குளிருமாத்தான் இருந்தது. அதைப்பாத்தா முடியுமா? ராத்திரியே துலாக் கயிறு, தண்ணி இறைக்கிற பெரிய டப்பா, மம்பட்டி எல்லாம் ரெடியா வச்சிருந்தாரு. அது களை எடுத்துக்கிட்டு அவரு கிளம்பினாரு.

மாடசாமி முன்னாலே போற மாதிரி தெரிஞ்சுது. அவரு தூக்கம் விெயாமலும், தண்ணி பாய்ச்சிற நெனப்போடவும் நடந்ததுனாலே எதையும்சரியா கவனிக்கவுமில்லே. தோட்டத் துக்குப் போனதும் டப்பாவை துலாவிலே முறைப்படி கட்டினாரு மாடசாமி, முதல்லே நீ தண்ணி இறைச்சுக் கொட்டு. நான் கடைசியிலே இருந்து பாத்திகளுக்கு பாய்ச்சிறேன். அப்புறம் நான் இறைக்கிறேன்னு சொல்லிட்டு, மம்மட்டியோட போனாரு. மடையைத் திறந்து பாத்திகளுக்கு சீராபாய்ச்சினாரு. ஆனா, அவரு வேலை செய்ற வேகத்தைவிட வேகம் வேகமா தண்ணி ஓடி வந்துது. மங்கலான நிலா வெளிச்சம்..துலா ரொம்ப வேகமா மேலேயும் கீழேயும் போய் வருது. தண்ணீர் கால்வா, வரப்பு எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு வருது. இது மனிசன் இறைக்கிற வேகமாத் தெரியலியேன்னு அவர் மனசுக்குப் பட்டுது. மானத்தைப் பாத்தாரு விடி வெள்ளியையே காணோம். அடடா, நாம மோசம் போயிட்டோமோன்னு அப்பதான் அவருக்குப் புலப்பட்டுது.

‘என்ன ஆச்சி அது? என்று பதட்டம் காட்டினாள் பேத்தி.

‘மாரியா புள்ளைக்கு புரிஞ்சு போச்சு. பேயிதான் நம்மை ஏமாத்தி இழுத்துக்கிட்டு வந்திருக்குன்னு நெனச்சாரு அம்மா, தாயே! அறமளத்தா, நீதான் என்னை காப்பாத்தனும்னு மனசிலே சொல்லிக்கிட்டாரு. அறம் வளர்த்த நாயகி என்ற அம்மன்தான் அவரோட குலதெய்வம். அம்மனை நெனச்சதும் அவரு மனசிலே ஒளி தோணிச்சு. அவரு பயப்படலே. அறமளத்தா, அறமளத்தான்னு சொல்லிக்கிட்டு.