பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 புண்ணியம் ஆம் பாவம்போம்!

கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்: அல்லது தானும் சூடாக ஏதாவது சொல்லவேணும். அப்புறம் தன் இஷ்டம்போல் காரியங்களை செய்யவேண்டியது . இந்த விதமாக ஒரு நியதி ஏற்படுத்திக்கொண்டாள் அவள்.

எனவே, மீனுக்குட்டி எல்லோருக்கும் எப்பொழுதும் ‘ஓயாத தொல்லை'யாகவே விளங்கினாள். வீட்டில் உள்ள பொருள்களுக்குக் காலன் ஆகத் திகழ்ந்தாள். அவள் உடைத்த சாமான்களுக்கு ஒரு அளவு கிடையாது. கிழித்த புத்தகங்களுக்கு ஒரு கணக்குக் கிடையாது. குழந்தைகள் என்றால் இவ்வாறெல்லாம் செயல்புரியத்தான் செய்யும். பெற்றோர்கள் ஒரளவுக்குப் பொறுத்துக்கொள்வதும் இயல்புதான்.

மீனு பெரியவர்களின் பொறுமையை மிகுதியும் சோதிக்கத் தொடங்கவும், அவர்கள் திட்டமிட்டார்கள், ‘அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டியதுதான்’ என்று. ~.

‘ஐந்து வயசு ஆனபிறகுதான் குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியும். இருந்தாலும் பரவாயில்லை. பாலர் பவனம் என்று ஒன்று இருக்கிறது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கு போதனை தருவார்கள். சிறு பிள்ளைகளுக்கு உற்சாகமான பொழுதுபோக்காகவும் இருக்கும்; புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பும் ஏற்படும் என்று ஒருவர் சொன்னார்.

சொர்ணம். பிள்ளையும், மீனுவின் அம்மா ஜானகியும் அதைப் பற்றித் திவிரமாக யோசித்தார்கள். மீனு நல்ல பெண்தான். ஆனால், வீட்டிலிருந்தால் வீணாகக் கெட்டுப் போகும். எதுவுமே படிக்கமாட்டேன் என்கிறது. வாய் அதிகமாப் பேசுகிறது. வேற்றிடத்திலே, பல குழந்தைகளோடு சேர்ந்து பழகி விளையாடினால்தான் இதுக்கு நல்லது என்று தீர்மானித்தார்கள். -