பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 239

ஆகவே, மீனுக்குட்டி பள்ளிக்கூடம் போகத் தொடங் கினாள். புது கவுன்; புது ரிப்பன்; புதிய பை, பலகை, ஒரு புத்தகம், சிரத்தையான சிங்காரிப்பு - அவளே கண் குளிரக் காண்பதற்கு ஏற்ற பொம்மைபோல் காட்சி அளித்தாள். இந்தப் புது அனுபவம்கூட அவளுக்கு ஒரு விளையாட்டு மாதிரித்தான் தோன்றியது. அவளும் அதில் முழுமனசுடன் ஈடுபட்டாள்.

பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்ததும் மீனுக்குட்டி பொரிந்து தள்ளுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. வாய் ஓயாது பேசி மகிழ்ந்தாள் அவள். பெரியவர்களும் ‘காதில் இன்பத்தேன் வந்து பாயக் கேட்டு ஆனந்தம் கொண்டார்கள். பெருமைப்பட்டார்கள்.

திடீரென்று சிரித்துக்கொள்டாள் மீனு. தான் பெற்ற இன்பம் எதையோ எண்ணிச்சிரிக்கும் மகிழ்ச்சிப் பெருக்கு அது.

‘என்னடி அது? மீனுக்குட்டிக்கு சிரிப்பாணி அள்ளிக் கிட்டுப் போகுதே? என்ன விஷயம்? என்று அம்மா விசாரித்தாள்.

அங்கே பத்மா, பத்மான்னு ஒரு பெண் இருக்கிறா. அவளை எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு என்றாள் மீனு.

அப்படியா?”

அவளுக்கு என்னென்ன வெல்லாமோ தெரியுது, அம்மா. இன்னிக்கு அவள் ராணி என்கிற பெண்ணைக் கூப்பிட்டாள். ராணி கர்வம் பிடிச்ச கழுதை, தனக்கு எல்லாம் தெரியும்னு பெருமை வேறே. அவகிட்டே பத்மா சொன்னாள் - நான் கண்ணை மூடிக்கிட்டு செய்றதை, நீ கண்ணைத் திறந்து கொண்டே செய்வியா? - என்றாள் ஒ, அது என்ன பிரமாதம் ராணி. உடனே பத்மா என்ன செய்தா? தன் ரெண்டு கண ணையும் மூடிக்கிட்டு, மண்ணை எடுத்த முகத்திலே போட் டாள். அப்புறம் அதைத் துடைத்தாள். கண்ணைத் திறந்து