பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 & புண்ணியம் ஆம் பாவம்போம்!

கொண்டே, சரிடி ராணி, இப்ப நீ சொன்னதுபோல் செய்து காட்டு’ என்றாள். அது எப்படி.டீ முடியும்னு ராணி சொல்லவும், பத்மா சண்டை பிடித்தாள். கோபம் வருமா வராதா பின்னே? நீ சொல்லும்மா. ராணி வாயடி அடித்தாள். பத்மா அவளைப் பிடிச்சு, அவள் மூஞ்சியிலே மண்ணை அள்ளிப் போட்டா... இப்ப நினைச்சாலும் சிரிப்புச் சிரிப்பா வருது. ராணியோட கண்ணு, மூக்கு, வாயி எல்லாம் மண்ணு. அவ து துயின்னு துப்பிக் கிட்டு, கண்ணைக் கசக்கிக்கொண்டு... மேலும் சொல்ல முடியாதபடி மீனுக்குட்டிக்குச் சிரிப்பு பொங்கிவிட்டது.அவள் கைகொட்டிச் சிரித்தாள். கலகலவெனச் சிரித்தாள். -

ஐயோ ஐயோ!’ என்றாள் ஜானகி. அடப் பாவமே!’ என்றாள் பாட்டி.

‘டீச்சருக்குத் தெரியாதா? டீச்சர் கிட்டே யாருமே சொல்லலியா என்று கேட்டார் அப்பா.

ஊகும். பத்மாவைப் பற்றி டீச்சர்கிட்டே யாருமே சொல்லமாட்டாங்களே. பத்மாவைத்தான் எல்லோருக்கும் பிடிக்கும் என்று மீனு உறுதியாக அறிவித்தாள்.

அம்மா அப்பா முகத்தைப் பார்த்தாள். அப்பா வெறுமனே தலையை ஆட்டினார்.

இப்படி எல்லாம் செய்யப்படாது, கண்ணு. பத்மா துஷ்டப் பெண் போலிருக்கு. அதுகூட நீ சேராதே” என்று பாட்டி உபதேசித்தாள்.

ஆயினும், மீனுக்குட்டியின் உலகத்திலே பத்மா அசைக்க முடியாத மகத்தான சக்தியாகப் புகுந்துவிட்டாள் என்பதை அவர்கள் ஒவ்வொரு நாளும் உணர முடிந்தது. பள்ளிக் கூடத்தில் பகல் பொழுதைப் போக்கிவிட்டு வீடு திரும்பும் மீனுக்குட்டிக்கு, அப்புறம்துங்கப்போகிற வரையில் பத்மாவின் நினைப்புதான்; அவளைப் பற்றிய பேச்சுதான்.