பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 புண்ணியம் ஆம் பாவம்போம்!

ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்தானே?’ என்று அம்மா கூறினாள்.

ஆமாம் ஆமாம் என்றார் அப்பா.

எண்ணங்கள் எல்லாமே எளிதில் செயல்பட்டு விடுவ தில்லை. ஜானகி தன் எண்ணத்தைச் செயலாக்க இயலவில்லை. எவ்வளவோ அலுவல்கள். எத்தனையோ சந்தர்ப்ப பாதகங்கள். சரி, நாளை போனால் போச்சு.. இன்னொரு தடவை பார்த்துக் கொள்ளலாம் என்று காலத்தை ஏலத்தில் விட்டு வந்தாள் அவள்.

மீனுக்குட்டி பத்மா புராணத்தை விட்டுவிடவில்லை. பத்மா அதைச் செய்தாள், இதைச் சொன்னாள், ச்சியின் தலைப் பின்னலைக் கத்திரித்து விட்டாள், தேவகியின் நோட்டிலே கிறுக்கி வைத்தாள், சாவித்திரி புத்தகத்தை எடுத்து மறைத்து வைத்துவிட்டு, அவளை அழ அழப் பண்ணினாள் - இப்படிப் பல திருவிளையாடல்கள். பத்மா என்னதான் செய்வாள் - அல்லது செய்யமாட்டாள் - என்றே சொல்ல முடியாது. அவன் குறும்புக்காரி. துடுக்குத்தனம் பெற்றவள். துணிச்சல்காரி. இதர சிறுமிகளின் வியப்புக்கு உரிய விளையாட்டுப் பிள்ளை, அதனால் விஷமத்தனங்கள் செய்வதில் அவள் மிகு ஆர்வம் காட்டி வந்தாள்.

மீனம்மாளின் பேச்சைக் கேட்ட அம்மாவும் அப்பாவும் பாட்டியும் இவ்விதம்தான் எண்ண முடிந்தது. பத்மா வின் பெற்றோரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொள்ள முடிய வில்லை அவர்களால். இப்படியும் ஒரு பெண்ணை வளர்ப் பார்களோ என்றே அவர்கள் நினைத்தார்கள்.

ஒருநாள் மீனுக்குட்டி முகவாட்டத்தோடு காணப் பட்டாள். ‘ஏன், என்ன விஷயம்? என்று அம்மா வினவினான்.