பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

‘பாவம் பத்மா இன்னிக்கு டீச்சர் அவளைக் கோபித்துக் கொண்டார்கள். வெளி வாசல்படி அருகேயே நிறுத்தி வைத்துவிட்டாங்க. இனிமேல் இது மாதிரி எல்லாம் செய்தால், ‘இங்கே வரவேபடாது’ என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாங்க என்றாள் மீனு. .

‘ஏனாம்?”

‘சரசு என்கிற சின்னப் பெண்ணை பத்மா பிடித்துத் தள்ளிவிட்டாள். சரசு கீழே விழுந்ததிலே மூக்கில் பலமான அடிபட்டு ரத்தம் வந்துட்டுது. எவ்வளவு ரத்தம்கிறே...

யேயம்மா!’ என்று மீனு விளக்கம் கூறினாள்.

வேண்டியதுதான். அந்த பத்மாக் குரங்குக்கு இதுவும் வேனும், இன்னமும் வேணும். அது சரியான பேய்க் குட்டி யாகத்தான் இருக்கும் போலிருக்கு என்று ஜானகி அழுத்தமாக அபிப்பிராயம் தெரிவித்தாள். மீனு பத்மாவுக்குப் பரிந்து பேசாமல் இருந்தது அம்மாவுக்குச் சற்றே ஆச்சரியம் அளித்தது. இதற்குப் பின்னர், மீனுக்குட்டி பத்மாவைப் பற்றி அதிகமாகப் பேசவில்லை. அவள் பேச்சில் பத்மா தலைகாட்டி னால்கூட, இப்பொழுது புதிய பத்மாபோல் தோன்றலானான். பத்மா திருந்தி விட்டாள் - திருத்தப்பட்டுவிட்டாள் - என்றே ஜானகி எண்ணினாள். அதற்காக டீச்சரை நேரில் பாராட்ட வேண்டும் என்ற ஆசைகூட ஏற்பட்டது அவளுக்கு. ஆனால், அந்த எண்ணத்தைச் செயலாக்குவதற்குத் தேவையான நேரம் அந்த அம்மாளுக்குக் கிடைக்கவில்லை.

முடிவில் அவள் அவசியம் பாலர் பலனத்துக்குச் செல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்து சேர்ந்தது. அங்கு பெற்றோர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு ஜானகியும் போனாள்.

பவனத் தலைவி காந்திமதி அம்மாள் குழந்தைகளின் சுபாவம் பற்றியும் அவர்களை இஷ்டம்போல செயல்