பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 புண்ணியம் ஆம் பாவம்போம்!

புரியவிட்டு, விளையாட்டு ரீதியிலேயே திருத்தும் முறைகள் பற்றியும் பேசினாள். அவள் கூற்றில் மிகுந்த உண்மை இருந் ததென உணர்ந்தாள் ஜானகி. .

விழா நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, ஜானகி காந்திமதி அம்மாளைச் சந்தித்தாள். அவளுடன், உபதலைவி கல்யாணியும், ஆசிரியை சாரதாவும் இருந்தாகள்.

‘நான்தான் மீனம்மாளின் அம்மா என்று ஜானகி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

‘சந்தோஷம் என்றாள் காந்திமதி. - “ஓ! மீனுக்குட்டி உங்களைப் பற்றி அடிக்கடி சொல்லு வாள் என்று சாரதா கூறினாள்.

‘உங்களை எல்லாம் சந்திக்க வேணும் என்ற எண்ணம் எனக்கு ரொம்ப நாளாக உண்டு. வேலைகள் அதிகம். அதனால் வர ஒழியவே இல்லை. மீனு எப்படி நடந்து கொள்கிறாள். எப்படிப் படிக்கிறாள் என்று அறிந்துகொள்ளணும்கிற அவாதான்...’ -

‘உங்களைக் கண்டு பேசவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும் உண்டு. இப்ப சந்தர்ப்பம் ஏற்பட்டதிலே ரொம்ப திருப்தி என்று கல்யாணி சொன்னாள். - .

‘மீனு இங்கு வந்து சேர்ந்த புதுசிலேதான் ஒரு மாதிரி இருந்தாள். குறும்புத்தனமும் பிடிவாதமும் அதிகம். ஆனால், வரவர நல்ல பெண்ணாகி விட்டாள். ஆச்சர்யகரமான மாறுதல் தான் என்று சாரதா அறிவித்தாள். .

அதற்கெல்லாம் காரணம் பத்மாதான். அவள் போக்கிரி யாக இருந்து, பல பெண்களின் மனசையே கெடுத்திருக்கிறாள். நீங்கள் உங்கள் அற்புதமான பயிற்சித்திட்டத்தினாலே அவளைத் திருத்திவிடவும், அவள் மற்றவர்களுக்கும் நல்ல முன்மாதிரி