பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 245

ஆகிவிட்டாள். எங்கள் மீனு எதற்கெடுத்தாலும் பத்மாவைத் தான் குறிப்பிடுவாள் என்று ஜானகி சொன்னாள்.

தலைவி காந்திமதி வியப்புடன் மற்றவர்கள்மீது பார்வை எறிந்தாள். ‘பத்மாவா? என்று ஆச்சர்யக் குறிப்புடன் கல்யாணி சாரதாவை நோக்கினாள்.

சாரதா சொன்னாள்: பத்மா என்று எந்தப் பெண்ணையும் மீனுக் குட்டிக்குத் தெரியாதே. உண்மையில் பத்மா என்று யாருமே எங்கள் வகுப்பில் இல்லை:

‘பின்னே மீனு சொன்னாளே. அடிக்கடி தினசரி சொல்லிவந்தாளே! என்று முனங்கினாள் தாய்.

‘மீனுக்குட்டிக்குக் கற்பனை அதிகம். அதை நான் கவனித்திருக்கறேன்’ என்று சாரதா ஸர்டிபிகேட் கொடுத்தாள். லேசாகச் சிரித்தாள்.

மீனுக்குட்டியின் கற்பனை சக்தியை எண்ணி மகிழ வேண்டும் என்ற ஆசை ஜானகிக்கு எழவேயில்லை. அவள் தினம் பொய்யா சொன்னாள்? நடக்காததை எல்லாம் நடந்ததுபோல் கதைத்தாளா? அல்லது, உண்மையில்தான் செய்தவற்றை எல்லாம், பத்மா என்று எவளோ செய்தது மாதிரி விவரித்தாளா? என்று குழப்பம்தான் ஏற்பட்டது அவளுக்கு.

என்ன பேசுவது என்றே புரியவில்லை அந்தத் தாய்க்கு. ஆயினும் ஏதாவது சொல்லியாக வேண்டுமே ‘மீனு இவ்வளவு பொல்லாதவளாக இருப்பாள் என்று நான் எண்ணியதே இல்லை என்று முனங்கினாள் அவள்.