பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பிறப்பு

ஒரு பாம்பு. சுழலும் காலத்தோடு ஊர்ந்து ஊர்ந்து வயதேறிய ஜந்து

- {if

அதன் மேனியிலே கண்ணாடிப் பளபளப்பு ஜொலித்தது. இளவெயில் பட்டுத் தெறிக்கும் போது வானவில்லின் வர்ணஜாலங்கள் சிதறிப் பின்னின அதைச் சுற்றி. நடுப்பகலின் சுட்டெரிக்கும் வெயிலிலே செடிகளின் அடியில் அது சோம்பிக் கிடக்கும் பொழுது, சூரியனின் கதிர்கள் அதன் சில பாகங்களை வருடுவது உண்டு. அவ்வொளி பட்டதும் பிறக்கும் பிரதிபலிப்பு என்ன பளிங்கு உமிழும் பகட்டுக் கதிரா?

சில சமயம் ஜிவ் வென்று சீறியெழும் அது. படம் விரிக்கும். நிமிர்ந்து நிமிர்ந்து ஆடும். சொக்கழகுத் தோற்றம். அந்த திமிர் பாவனையிலே, நெளிந்து நெளிந்து அசையும் ஒய்யார நடையிலே, சிந்தை பறிகொடுத்த நாக கன்னிகள் எவ்வளவோ

எல்லாம் அந்தக் காலத்தில் கதையாகி விட்டது இன்று.

பெருமூச்செறிந்தது கிழட்டு நாகம்.