பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 புண்ணியம் ஆம் பாவம்போம்!

புரியவில்லை. இனி அதைப் பற்றி எனக்கென்ன என்று நெளிந்து கொடுத்தது. -:

எங்கோ ஒரு அசட்டுத் தவளை கொர்ர... கொர்ர. கொர் என இசைக்கும் ஒலி காற்றில் மிதந்து வந்தது. பாம்பின் செவியில் பட்டது. கண்களில் மகிழ்வாய் மலர்ந்தது.

சர்ரெனப் பாய்ந்து சென்றது புத்துயிர் பெற்ற கருநாகம்.

அதன் அசைவால் சலனமுற்ற வாயு முணுமுணுத்தது. ‘மரணம் இனியது. அதை எதிரேற்க அஞ்சவும் வேண்டுமா? இறக்காமல் எப்படி பிறப்பு இன்பம் பெறுவது? ஆன்மா நெளிவதும் புரள்வதும் தான் இறப்பும் பிறப்பும். காலத்தின்

அசைவும் உருள்தலும் பகலும் இரவுமாய் பரிணமிப்பது போல.”

e