பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் *27

சிரிக்கிறது. அந்த வாண்டுப் பயபுள்ளெ மீது எனக்குக் கோபம் வரவில்லை. அதன் சிரிப்பு முகம் மிகக் கவர்ச்சிகரமாக இருக்கிறது. அதன் ஒளிநிறை விழிகள் வெகு இனியன. அதையே பார்த்துக் கொண்டு, அதோடு சேர்ந்து நானும் சிரிக்கிறேன். திடீரென்று அது எதையோ கண்டு மிரள்கிறது. பயப்படுகிறது. அதன் முகம் பீதியைக் காட்டுகிறது. நான் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்தக் குழந்தை அழுகிறது. ஓவென்று அலறுகிறது. பார்வைக்கு இனிய ரோஸ் நிறமாக மலர்ந்திருந்த பூவிதழ்கள் ரத்தச் சிவப்பாக மாறுகின்றன. நீலம் படர்கிறது அதில் என் கண் முன்னாலேயே அந்தப் பூ கன்னக் கருமை நிறம் பெற்றுவிடுகிறது. இப்போது குழந்தை முகத்தைக் காண வே காணோம். பெரிய பூ வாட்டமுற்று, கவிழ்ந்த தலைபோல், லொவுக்கென்று சாய்கிறது...

ஒரு சமயம், நான் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தேன். கனவில்தான், அது எந்த ஊர்நதிக்கரை என்று தெரியவில்லை. வளைந்தும் நெளிந்தும், ஒரு இடத்தில் விசாலமாயும், இன்னொரு இடத்தில் குறுகியும் கிடந்த ஆற்றில் தண்ணீர் அதிகம் ஒடவில்லை. சில வளைவுகளில், காட்டுப் பூச் செடிகள் பலநிற மலர்களைத் தாங்கியவாறு, பசுமையாக நின்றன. ஒன்றிரு இடங்களில், பாறைகள் மொழுமொழு வென்று உருண்டு திரண்டு வளர்ந்து நின்றன. ஆட்கள் யாரும் தென்படவேயில்லை. நல்லவெயில் நேரம். வானம் நீலம்ாய் பிரகாசித்தது. நான் மணலில் நடந்தேன், எங்கு போவது என்ற குறிக்கோள் இல்லாமல். ஆற்றோர அழகுகளும் அமைதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. திடீரென்று ஒரு சிறு பெண் என் பக்கத்தில் நின்றாள். அவள் எங்கிருந்து, எப்படி வந்தாள் என்ற திகைப்பு எனக்கு. நீலநிறப் பாவாடையும், வெள்ளைச் சட்டையும் அணிந்து, இரட்டைச் சடையும் சிவப்புச் சாந்துப் பொட்டுமாக, சுமாரான கவர்ச்சித் தன்மை கொண்ட முகத்தினளாய் விளங்கினாள். பன்னிரண்டு பதின்மூன்று