பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 புண்ணியம் ஆம் பாவம்போம்!

திடீரெனத் தண்ணீர் வறண்டு பலவகை மீன்களோடு எல்லாம் கண்ணில் படுகிறது. நான் அங்கெல்லாம் நடக்கும் ஆசையோடு உள்ளே இறங்குகிறேன்.

இப்படி எத்தேையா கனவுகளை சொல்லலாம். அவை அனைத்தும் நிச்சயமானவையாக, உணர்வுகளை பாதிப் பனவாக உள்ளன. இதனால் அநேக சந்தர்ப்பங்களில் விழிப்பு நிலையில் எனக்குக் குழப்பம் ஏற்படுவது உண்டு. கனவுகளில் நிகழ்ந்தவற்றை, நிஜமாகவே வாழ்க்கையில் என்றோ நடந்ததாக எண்ணிக்கொண்டும், கனவில் சந்தித்தவர்களை உண்மையில் எப்பவோ சந்தித்ததாக மயங்கியும், சிலபேரிடம் சில விஷயங்களைப் பற்றிப் பேச, அவர்கள் விவரம் புரியாது முழிக்க, நான் விழுந்து விழுந்து சிரிக்கவும், எனக்கு மூளையில் ஏதோ கோளாறு என்று நம்பிக்கொண்டு, அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு, பரஸ்பரம் பரிமாறிக்கொள்கிற பார்வை இருக்கிறதே, ஹஹஹ்ஹா ஒரே தமாஷ் தான்போ!

சில கனவுகள், நிச்சயமாக அவை கனவுகள்தான் என்ற உணர்வு இருந்தபோதிலும், என்றாவது விழிப்பு நிலையில் பிரத்தியட்சமாக எதிர்ப்படக்கூடும் என்றொரு குறுகுறுப்பை உள்ளத்தில் ஏற்படுத்தி விடுகின்றன.

அப்படித்தான் ஒரு கனவு அதை நான் மறக்க முடிவதே யில்லை. அது திரும்பத் திரும்ப மூன்று, நான்கு தடவைகள் தோன்றிவிட்டன. அதனாலேயே அது உறுதியாக ஒருநாள்

வாழ்க்கையின் நிச்சய நிகழ்ச்சியாக உருப்பெறும் என்ற நம்பிக்கை என்னுள் வளர்ந்து வருகிறது.

ஒரு தனி வீடு, பசுமையான, குளுமையான, இனிய சூழ்நிலை. வருகிற வழிநெடுகிலும், மனோரம்மியமான பூக்கள் மலர்ந்து திகழும் அருமையான செடிகள். இது வரையிலும் நான் பார்த்திராத இடம். அந்த இடமும் வீடும் எனக்கு மிகுதியும் பிடித்திருக்கின்றன. கதவு பூட்டியிருக்