பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 33

கவில்லை. திறந்துகொண்டு நான் உள்ளே போகிறேன். எங்கும் இனிமையான மனம் நிலவுகிறது. வீட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அறை அறையாகப் போய் பார்க்கிறேன். வாங்க. உட்காருங்க” என்று மென்மையான குரல் காதில் விழுகிறது. யார் பேசுவது? எங்கிருந்து பேசுகி றார்கள்? தெரியவில்லை. வசதியான ஒரு நாற்காலியில் அமர்கிறேன். மேஜைமீது காப்பி டம்ளர் தோன்றுகிறது. கமகமவென்று வாசனை பரப்பும், சூடான, ஸ்ட்ராங்கான காப்பி. அங்கே எப்படி வந்தது? யார் கொண்டுவந்து வைத்தது? விளங்கவில்லை. காப்பியை குடிக்கிறேன். யார் அது? எப்படியும் கண்டு பிடித்துவிடுவேன். ஆனால் கொஞ்சம் ஒய்வு எடுத்துக் கொள்ளலாமே முதலில். சுகமான படுக்கை பரப்பிய கட்டிலில் படுக்கிறேன். தூங்கிப் போகிறேன்...

ஒவ்வொரு தடவையும் இதே கதைதான். ஒரு நாளாவது, ரெஸ்ட் எடுக்காமல் உடனடியாகத் தேடிப் பார்ப் போமே என்கிற எண்ணம் எனக்கு ஏனோ தோன்றுவதில்லை. அது வேடிக்கையாகத்தான் இருக்கிறது. நிஜமாகவே அப்படி ஒரு இடத்துள் என்றாவது ஒருநாள் நான் பிரவேசிக்க நேரிட்டால், அங்கும் இதெல்லாம் நிகழ்ந்தால், அப்பவும் நான் ஆர்வத்தோடு, அறியும் அவாவோடு, தேடிப் பார்க்காமல், படுத்துத் தூங்கிவிடுவேன்போலும் என்றொரு நினைப்பு என்னுள் நெளிகிறது. இதை சோதித்து அறிவ தற்காகவேனும், அந்தக் கனவு நிஜமாகவே நடந்தாக வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். .

விசித்திரமான ஆசை என்று தானே நினைக்கிறீர். இல்லையா? இதைவிட விநோதமானது தமாஷானது - சமீபத்தில் நிகழ்ந்தது. கனவில்தான். வேறு விஷயங்களை நான் ஏன் வர்ணிக்கப்போகிறேன்?