பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 & புண்ணியம் ஆம் பாவம்போம்!

எதிர்ப்பெஞ்சில் துயில் புரிந்த அழகி, தலைமாட்டில் கணவனும், கால் பக்கம் எவளோ ஒருத்தியும் இருக்க, கால்களை மடக்கி, தானே ஒடுங்கிக் கோணிக் கிடக்க நேர்ந்தது. இந்தப் பெஞ்சில், சிதம்பரத்தின் அருகில், துங்கியவளுக்கு நல்ல வசதி. -

அவள் தலைமாட்டில், சாளரத்தை ஒட்டி, அவன் ஒடுங்கி யிருந்தான். பெஞ்சில் இடம் பிடித்து அமர்ந்திருந்த மற்றவர்கள் கீழே பலகைப் பரப்பிலும், மேலே கட்டை களிலும் படுக்கப்போய்விட்டார்கள். எனவே, அந்தப் பெண் கால்களை நீட்டிச் சுகமாகப் படுத்துத் தூங்க முடிந்தது. வாயினால் ஊதி ஊதி, உள்ளே காற்றைப் புகச் செய்து பருமனாக்கிக் கொள்ளக்கூடிய ரப்பர் தலையணை வேறு வைத்திருந்தாள் அவள். ஒடும் வண்டியின் அசைவு காரணமாக அவளது உணர்வற்ற உடல் நகர்ந்து மெது மெதுவாக அவனைத் தொட நெருங்கிக்கொண்டிருந்தது. அவள் தலை அவனைத் தொட்டும் விட்டது. தடித்த சடைப் பின்னல் தலயை அழுத்தியிருக்கும் போலும். அவள் விழிக்காமலே, அதை எடுத்துப் பின்னால் தலைக்கு மேல் விசினாள். அப்படி வீசிய வேகத்தில் அது நெளிந்து வந்து சிதம்பரத்தின் மடிமீது விழுந்தது. மினுமினுக்கும் கருந்ாகம் போன்ற குழற் பின்னல் அது.

அதைத் தொட வேண்டும் என்ற ஆசை சிதம்பரத்துக்கு எழுந்தது. அவ்வாறு தொட்டால் அவள் விழித்து விடுவாளோ என்ற பயமும் சந்தேகமும் கூடவே தோன்றின. தூங்கும் பெண்ணின் கூந்தலைத் தொடுவதனால் அவள் உணர்வு விழிப்பு ப்ெறப்போவதில்லை என்று துணிந்தான் - - H GET :

பெண்ணின் கூந்தல் அழகு, அதன் மென்மை, இனிமை

முதலியன பற்றியும், அதை விரும்புவதாலும் பிடித்து இழுப்பதாலும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சி பற்றியும் அவன்