பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலலிக்கண்ணன் 43

‘இதுக்கு உன்னை தலைமை ஆசிரியரிடம் அனுப் பணும். இந்தத் தடவை மன்னிக்கிறேன். இனி இப்படி நடக்கக்கூடாது. சரி போ’ என்று கடுகடுப்பாகப் பேசினார் அவர். படங்களை எடுத்து மேஜை இழுப்பறையில் வைத்து விட்டு, நோட்டை மாணவனிடம் கொடுத்தார்.

மீண்டும் பாடம் தொடர்ந்தது.

தலைமை ஆசிரியர் நித்தியானந்தம் அந்தப் பக்கம் வந்தார்.

சீவாத தலையும் சிரிக்காத முகமுமாய் காட்சிதரும் சீரியஸ் பேர்வழி அவர் கண்டிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர் எடுத்தவர். பையன்களின் ஒழுக்கமும் பள்ளியின் நற்பெயரும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் கருத்தாக இருப்பவர். குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனை கொடுக்கத் தயங்காதவர். ஏ ஒன் கடுவன் பூனை என்பது மாணவர்கள் அவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர்.

வந்தவர், இங்கே ஏதோ சத்தம் எழுந்ததே என்ன விஷயம்?’ என்று ஆசிரியரை விசாரித்தார்.

‘ஒரு நகைச்சுவை. பையன்கள் ரசித்துச் சிரித்தார்கள்.” என்றார் ஆராவமுதன். -

உ.ம். அமைதி முக்கியம் என்ற பெரிய ஆசிரியர், எழுந்து நின்ற பையன்களைப் பார்வையால் அளந்தார். தலையை ஆட்டி விட்டு நகர்ந்தார்.

பத்தாம் வகுப்பின் பக்கம் நடந்த தலைமை ஆசிரியர். சன்னல் அருகே வந்தபோது, உள்ளே கடைசி வரிசையில் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டதை கவனித்து விட்டார்.

பெரியபையன் ஒருவன் ஒரு புத்தகத்தை இன்னொரு சிறுவன் பக்கமாக வீசி எறிய, அதை மற்றவன் டெஸ்க்