பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஆம் பாவம்போம்:

4

6


ss

கண்டிப்புடன் பேசினார் தலைமை ஆசிரியர். ‘சார், மன்னிக்கனும் சார். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் சார்.”

ஒவ்வொரு பையனும் மந்திரம் போல் இதைச் சொன்னான்.

‘இப்ப செய்ததுக்காகத்தான் இந்தத் தண்டனை. இனி மேலும் செய்தால் நான் ரொம்பக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். எனக்கு ஒழுக்கமும் கட்டப்பாடும் ரொம்ப முக்கியம் என்று பெரியவர் திடமாக அறிவித்தார்.

பையன்கள் மவுனமாக நின்றார்கள்.

‘நிற்கிறதிலே பிரயோசனமில்லே. அபராதம் கட்ட வேண்டியதுதான். போங்க என்று முடிவாகச் சொன்னார்

அவர்.

மாணவர்கள் தலை குனிந்தபடி வெளியேறினார்கள்.

வீட்டுக்குப் புறப்பட்டபோது, தலைமை ஆசிரியர் நித்தியானந்தம் ஞாபகமாக அந்தப் புத்தகத்தை எடுத்துத் தனது பைக்குள் வைத்துக்கொண்டார். அமைதியாக இருந்து படித்து ரசிப்பதற்காகத்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன், கவர்ச்சிப் படங்களைப் பறிகொடுத்த பையனிடமும் மற்றும் சில சிநேகிதர்களிடமும் ஒரு சுவையான தகவலை அறிவித்தான்.

‘நான் காம் போசிஷன் நோட்டுகளை லார்வாள் வீட்டிலே கொண்டு சேர்ப்பதற்காக நேற்று சாயங்காலம் போனேனா? ஸார் மேஜே மேலே ஸாரோட சொந்த நோட்டு இருந்தது. புரட்டிப் பார்த்தேன். ஜெயமாலினி படத்தையும் சிலுக்கு படத்தையும் அந்த நோட்டிலே ஆராவமுதன் சார்