பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 51

தேங்ஸ் சார். ரொம்ப நன்றி, வீட்டிலே காத்துக்கிட் டிருப்பா. நான் போய் தான்ரேஷன் கடைக்குப் போகணும். வாறேன். சார்!’ என்று கூறிவிட்டு ராம் வெளியேறுகிறார்.

அப்புறம்

மிஸ்டர் ராம் ‘ஒட்டல் வெளிச்சப் பிரகாசத்தில் காணப் படுகிறார். பாதாம் அல்வா சாப்பிட்டபடியே, மசால் தோசைக்கு ஆர்டர் பண்ணிவிட்டு, மகிழ்ச்சியோடு அப் படியும் இப்படியும் பார்க்கிறார்.

அவருடைய நண்பர் ஒருவர் வருகிறார். ஹல்லோ மிஸ்டர் ராம்!”

ஹல்லோ, ஹல்லோ என்ன? என்ன விசேஷம் டியன் பண்ணுங்களேன்! - .

வேண்டாம், வேண்டாம், இப்பதான் சாப்பிட்டேன்’

வெறும் காபியாவது? .

‘இடமில்லை. ராம்: -

. ஒரு கப் காப்பிக்கு எப்போதும் இடம் உண்டு ஒரு காப்பி கொண்டாடப்பா முதல்லே! என்று ராம் ஆர்டர் பண்ணுகிறார்.

நண்பர் சினிமாக்கள் பற்றிப் பேசுகிறார். வாரக் கணக்கில் கும்பலைக் கவர்ந்திழுக்கும் ஒரு படம் பற்றி சுவையாகக் கூறுகிறார். - *

அப்ப பார்த்திட வேண்டியதுதான் இது ராம்.

டிடன் ஆயிட்டங்கள் முடிந்ததும் ராம் பில் படி பணம் கொடுத்துவிட்டு நண்பரோடு நடக்கிறார். இருவரும் பஸ் பிடித்து, தியேட்டருக்குப் போகிறார்கள். ‘