பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் * 53

நான்கு பெண்கள் ஸ்டைலுக்கும் நாகரிக முற்போக் குக்கும் சரியான எடுத்துக்காட்டுகள்.

‘நம்ம வசந்தா விஷயம் தெரியுமோ?’ என்றாள் தோ. தெரியாதே’ என்ன சமாச்சாரம் அவள் என்ன செய்தாள்? என்று வெடித்தன. கமலா, சுந்தரி, சரஸ்வதி குரல்கள்.

‘ஸ் கூட்டர்வாலா ஒருவன் கூடச் சுற்றிக் கொண்டி ருந்தாள் இல்லையோ? இப்போ அவனை விட்டுவிட்டாள். அம்பாசடர் காரில் அடிக்கடி போகும் அதிர்ஷ்டம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது என்று கீதா சொன்னாள்.

பரவால்லியே! என்றாள் சுந்தரி. அவள் துணிந்தவள்தான் என்று கமலா சென்னாள்.

துணிவு உள்ளவர்களுக்குத்தான் அதிர்ஷ்டமும் துணை புரியுமாம்!’ என்று சரஸ்வதி வருத்தத்தோடு குறிப்பிட்டாள். தனக்குத் துணிச்சலும் போதாது, அதிர்ஷ்டமும் இல்லை என்ற குறை அவளுக்கு என்றுமே உண்டு.

‘வசந்தா லைஃபை என்ஜாய் பண்ணணும்கிற ஐடியா உடையவள். அதுக்குத்தக்கபடி வாய்ப்புகளையும், வசதி களையும் தேடிக்கொள்ள அவள் தயங்குவதே கிடையாது!” இது கீதா.

இரண்டு பெண்கள் அவ்வழியே போனார்கள் நாகரிக வளர்ச்சியின் அளவுகோல்கள் அவர்கள்.

தமிழ்நாட்டுப் பெண்மணிகள் எட்டு கஜம் சிலையை உடம்பில் வரிந்து வரிந்து கட்டிக் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த காலம் எப்பவோ போய்விட்டது. ஆறு கஜம் புடவை போதும் என்று அணிந்து திரிவது சகஜமாகியுள்ளது. அதுகூட அதிகம். ஐந்து கஜமே-போதும் என்று நவயுவதிகள் தீர்மானித்து, நழுவி நழுவி விழும் இயல் புடைய மினுமினுச்.