பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புண்ணியம் ஆம் பாவம்போம்!

சேலைகளை உடம்பில் சுற்றிக்கொண்டு, தோளில் கைக் குட்டை மாதிரிக் கிடக்கும் பகுதியை எடுத்து இழுத்து வெளிச்சம் போட்டபடி காட்சிதருகிறார்கள். இவ்விரண்டு பெண்களும் இந்த ரகத்தினர்தான். -

இதே லெட்சணத்தில் தோற்றம் காட்டிய சிங்காரி ஒருத்தி, அன்பன் ஒருவனைக் கட்டிப் பிடித்தபடி, ஸ்கூட்டர் பின்பக்கத்தில் உல்லாசச் சவாரி போனாள். அவள் தோளில் தொத்திக் கிடந்த சீலையின் சிறு பகுதி காற்றில் பறந்து, இங்கே பாருங்கள் கண் பெற்ற பயன் பெறுங்கள் என்று சையை செய்வது போல், விளம்பரமாய் துள்ளிக் கொண் டிருந்தது. - -

உத்தியோகப் பெண்கள் நால்வரும் பெருமூச் செறிந்தார்கள். நாமும் இது மாதிரித்தான் ஸேரி கட்டிக் கொள்ளணும் இனிமேல். ஜாக்கெட்டை இன்னும் கொஞ்சம் கூடச் சிறிதாக்கிக் கொள்ளணும் என்று தீர்மானித்தார்கள்.

பஸ் வந்து சேர்ந்தது. சரிநிகர்சமானமாக எல்லோ ருடனும் போட்டிபோட்டு இடித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி “ஸ்டாண்டிங் பயணிகளானார்கள் அவர்கள்.

ஒளிமயமான எதிர்காலம்

நாகரிகப் பெரு நகரத்தில், மிக நாகரிகமான ஒரு ஒட்டல், அதன் நிர்வாகம் அனுமதிக்கிற நபர்கள் தான் - அவர்கள் நிர்ணயிக்கிற உடைகளில்தான் உள்ளே பிரவேசிக்க முடியும். அங்கே உள்ளே தீனிவகைகளும் குடி தினுசுகளும் குட்டிகளின் குதியாட்டமும் எப்படி எப்படி இருக்கும் என்பதை அங்கு போய் வருகிற அதிர்ஷ்டசாலிகளே அறிவர்.

விசேச நாட்டிய நிகழ்ச்சி என்று சில தினங்களில் நீக்ரோ மங்கையோ, ஜப்பானிய அழகியோ, பாரிஸ் பியூட்டியோ, பர்மா சிங்காரியோ அல்லது வேறு எந்நாட்டினளோ