பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புண்ணியம் ஆம் பாவம்போம்!

வெவ்வேறு சமயங்களில் ஒருவரை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன. அவர் அவர்களுடைய குறிப்பிட்ட நேரத்திய மனநிலை சூழ்நிலை, பக்கத் துணை முதலியவற்றைச் சார்ந்து அமையக்கூடிய விஷயம் அது.

இப்படி எல்லாம் இருப்பதனால், வாழ்க்கையை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு நாடகமாகவும், ரசிக்க வேண்டிய விளையாட்டாகவும் தோன்றுகிறது.

தான் வாழ்க்ைைகச்சுழல்களில் சுழிப்புகளில் அனுபவச் சிக்கல்களில் ஆழ்ந்து விடாது, வாழ்வின் ஒரத்தில் நின்று, வாழ்க்கையையும் மனிதர்களையும் வேடிக்கை பார்த்து வருகிறேன். அவை எழுப்புகிற எனது மன அலைகளையும் எண்ண ஓட்டங்களையும் சுவையாக எழுத்தில் பதிவு செய்து வந்திருக்கிறேன். சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்ற வடிவங்களில். . .

தான் பலநூறு சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். விதம் விதமான கதைகள். உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தடையிலும் ரகம் ரகமானவை. உணர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் கதைகள். மனிதர்களின் விந்தைப் போக்குகளையும் விசித்திரச் செயல்பாடுகளையும் விபரீதக் கற்பனைகளையும் விநோதமான நம்பிக்கைகளையும் விதம் விதமான அனுபவங்களையும் வெளிப்படுத்துகிற கதைகள்.

மனிதமனம் ஒரு அபூர்வ விஷயம். அதிசய சக்திகள் கொண்டது. அது மனிதர்களை எப்படி எப்படி எல்லாமோ ஆட்டி வைக்கிறது. அவற்றை சித்திரிக்கிற சொற்சித்திரங்கள் என் கதைகளில் மிகப் பல. . &

அன்பையும் மனிதநேயத்தையும் வலியுறுத்தும் கதைகள், வாழ்வின் வெறுமையையும் அர்த்தமற்ற தன்மை