பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஆம் பாவம்போம்!

5

8


காலத்திலே எவ்வளவு வேகமாக முன்னேறியிருக்கு பாரும். இன்னும் அஞ்சு வருஷத்துக்குள்ளே இதுவும் டில்லி, பம்பாய், கல்கத்தா மாதிரி பிரமாதமாக இருக்கும். அன்று நைட் லைஃபை என்ஜாய் பண்ன சொசைட்டிப் பெண்களும் ரொம்ப நிறையவே வருவார்கள். நம் நகரத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்குது, பிரதர் என்று உறுதியாகச் சொன்னார் முதல் அண்ணாத்தை.

இசை முழக்கம் கல்யாண வீடு ஒன்றிலிருந்து கிளம்பும் இசைத் தட்டு சங்கீதம், ஒலி பெருக்கி மூலம் காதை அறுக்கும் கூச்சலாய் பரவுகிறது.

‘வாழ்க்கை என்பது ஜாலி: - அதை அனுபவிப்பதே நம் ஜோலி!