பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பயந்தவன்

கொலைவணிகர் புரத்திலே கொலை வணிகர் குலத்திலே அவன் பிறந்திருக்கக் கூடாது.

ஆனால், எங்கே எப்பொழுது யார் பிறக்க வேண்டும் என்பது அவரவர் எண்ணத்தைப் பொருத்து ஏற்படுகிற விளைவா என்ன!

அப்படி அவன் பிறந்த பிறகு அவனுக்கு அச் சூழ்நிலைக்குத் தேவையான மனப் பண்பு இல்லாமல் போனதுதான் இயற்கை அவனுக்குச் செய்த வஞ்சகம் என்று சொல்ல வேண்டும்.

பொதுவாக, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, ஒருவன் மனிதத் தன்மையை இழந்து விடவேண்டும் என்கிற நியதியை வாழ்வின் கதியும் உலகப் போக்கும் நிர்ணயித் திருக்கிறபோது. கொலையையே உயிர் வாழ்வதற்கு உதவிபுரிகிற உத்தியோக மாகப் பாவிக்கும் குலத்தில் வந்த அவன், அந்த வாணிபத்தைத் தந்தைக்குப் பிறகு பெற்றுக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய கடமைக்கு உள்ளான அவன், உணர்ச்சிகள் அலை மோதாத இதயம் பெற்றிருக்க