பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60) * புண்ணியம் ஆம் பாவம்போம்!

வேண்டும். ஆனால், இயற்கை அவன்நெஞ்சைக் கல்லாக்க

வில்லையே!

அந்தத் தொழிலைச் செய்வதற்குத் தேவையான உடலுரம் அவனிடமிருந்தது. உள்ளத்து உறுதியும் இல்லாமல் போகவில்லை. எனினும் மனிதத் தன்மை தனது வலிமையை அதிகம் காட்டிவிட்டது. . -

மனிதன் செய்கிற குற்றங்களுக்கேற்பத் தண்டனை அளிக்கும் சட்டம் மகத்தான குற்றத்துக்கு விதிக்கும் மகத்தான தண்டனை குற்றவாளியைச் சாகடிப்பது தான். அதனால் குற்றம் செய்தவனுக்கு எந்த விதமான போதனையும் செய்ய முடியாமல் போனாலும், குற்றம் செய்ய விரும்புகிற வர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக - பாடம் கற்பிக்கும் சாதனையாக - சட்டம நிர்ணயித்துள்ள விதி இது. அதன்படி ‘சீட்டுக் கிழிக்க ப்பட்டவனைக் கயிற்றிலே தூக்கி ஊசலாடச் செய்கிற திருப்பணியை புரிந்து வந்தவர்கள் பரம்பரையாகத் தோன்றிய குலத்தில் வந்த அவனுக்கு அக்னிப் பரீட்சையாக இருந்தது முதல் தூக்கு. ... “ . . . . . .

துக்குத் தண்டனைக்கு உள்ளானவர்கள் காற்றிலே தொங்கும் காட்சியை - அப்படி அவர்களைத் தொங்க விடுகிற சடங்கை - அவன் பார்த்திருக்கிறான். அக்காட்சிகளைக் காட்டியும், அச்சடங்கைச் செய்ய வேண்டிய முறைகளைப் பற்றியும் அவன் தந்தை அவனுக்கு விளக்கியிருக்கிறார். அவன் குடும்பத்தில் வந்த ஒருவர் ஒரே நாளில் பதினைந்து பேரைத் தூக்கிவிட்டு, அதன் பிறகு கூடக் கலக்காமலும் வருந்தாமலும் இருந்த தீரத்தைச் சிலர் மெச்சியதுண்டு.

என்றாலும் அவனுக்குத் துணைபுரியவில்லை முந்திய குலப்பெருமையெல்லாம். கடமையை நிறைவேற்ற வேண்டி யிருக்கிறதே என்ற உதைப்பு அவனுக்கு சில தினங்களாகவே பிறந்திருந்தது. .