பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 6

ஒரு மனிதனைக் கொல்ல வேண்டும். தனக்கு எவ்விதமான தீங்கோ பயமோ செய்திராத - செய்ய வேண்டும் என்ற எண்ணமே கொண்டிராத ஒரு அப்பாவி மனிதனை, சட்டத்தின் பெயரால் கழுவி லேற்றிக் காற்றிலே ஆடவிட அவன் ஒரு கருவியாக வேண்டும். ஏன்? மனிதகுலத்தின் தீராத துடிப்பை எழுப்பும் வயிற்றுக்கு வகை செய்வதற்கு ஏதாவது ஒரு தொழில் பார்க்க வேண்டியதுதானே என்ற நோக்கத் தோடு இந்தத் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தியவர்களின் வாரிசாகப் பிறந்து விட்டதனால்; அவர்களது சுவட்டிலே சென்று தன்னுடைய தன்னை நம்பி யிருப்பவர்களுடைய வாழ்வுப் பிரச்னைக்கு சிறு மாற்றுக் காண இசைந்ததனால்.

அவனுக்குத் தெரியும்...

அவனுடைய முன்னோர்கள் அடிக்கடி சொல்லி வந்திருப்பது தான்: “அநியாயமாக நாம் யாரையாவது கொன்றால், அது பாபம். பொருளாசையினாலோ, வேறு ஆசைகளாலோ யாரையாவது நாம் வலியப் போப் கொன்றால் அது பெரிய பாபம் தான். ஆனால் நியாயமும் சட்டமும் தீர்ப்புக் கூறி, நீ உலகத்தில் வாழ அருகதை யற்றவன்; இந்த சமுதாயத்திலே உன்னை விட்டு வைத்திருப்பது தப்பு: நீ சுதந்திரமாகத் திரிந்தால் அது சகோதர மனிதர்களுக்கு ஆபத்தையே விளைவிக்கும்; அதனால் உனது கணக்கைத் தீர்த்து விடுகிறோம். நீ சாகவேண்டியதுதான் என்று முடிவு கட்டி விடுகிற ஒருவனைத் தண்டனைக்கு உள்ளாக்குவது பாபமா? அப்படியே அது பாபமாக இருந்தாலும்கூட, அது நம் தலையில் படியாது. தீர்ப்புக் கூறுகிறவர்கள் பேரிலும் விழாது. சட்டம், நீதி முதலிய வைகளையே சேரும். *

இது சரிதானா? அவனுக்கு புரியவில்லை. அவன் படித்தவன் அல்ல. படிக்க வழி ஏது அவனுக்கு? அவனைப்