பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 * புண்ணியம் ஆம் பாவம்போம்!

படிக்க வைக்க வகை ஏது அவனது பெற்றோருக்கு? அதனால் அவன் புரியாத புதிர்களை வைத்துக் குழப்பிக் கொண்டு கலங்கியலைந்தான்.

கொலைத் தண்டனையை நிறைவேற்றத் தான் ஒரு கருவி என்றால் - தொங்குகிற மனிதனின் கழுத்தை இறுக் குகிற முடிச்சுக் கயிறு போல துக்கு மரம் போலத் தானும் ஒரு கருவி மாத்திரமே யென்றால்... சட்டத்திற்கு, சட்டத்தை நிர்வகிக் கிறவர்களுக்கு வளைந்து கொடுக்கிற துணைதான் என்றால், மற்றவர்கள் தன்னை, தன்ச்ை சேர்ந்தவர்களை தன் குலத்தை அகெளரவமாக, வெறுப்புக்கும், அர்த்தமற்ற பயத் துக்கும் இலக்காக்கி ஒதுக்கி வைப்பது ஏன்? விஷ ஜந்துக் களைக் கண்டு விலகிப் போவது போல் நகர்ந்து தூரப் போவதேன்? தங்களை ஒதுக்கித் தனியிடத்திலே தள்ளி

பிட்டது ஏன்?

அவனுக்கு விளங்கவில்லை. அமைதியற்ற ஆழ்கடலில் ஆரவாரித்துப் புரண்டு தலைதூக்கும் அலைகளைப் போல் ஆயிரமா யிரம் ஏன்?'கள் எழுந்து அவன் எண்ணத்தை உலுக்கி, அர்த்தம் காண முடியாத பிரச்னைகளை ஆட்டிப் புடைத்து அவனை அலைக்கழிக்கும்.

தன் மனச்சாட்சியை திருப்திப்படுத்த அவன் மதபோதகரை நாடினான். அவர் சொன்னார்: “மகனே, கொலை செய்வது பாபம்தான். உயிரை அழிப்பது கொல்ை தான் என்றாலும் எல்லா அழிப்பும் கொலையாகி விடாது. அதனால் எல்லாம் பாபமல்ல, உணவுக்காக உயிர்களைக் கொல்லுவதும், ஆராய்ச்சிக்காக உயிர்வதை செய்வதும் பாபமல்ல. நாட்டைக் காப்பாற்றவும், யுத்தத்தினாலும் அழிவு வேலையில் முனைவது பாபமல்ல. கொல்ல வேண்டும் என்கிற நோக்கமேயில்லாமல், தன்னையறியாமலே கொலைக்கு உள்ளாகிற செயலைச் செய்து விடுவதும்