பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

4.

புண்ணியம் ஆம் பாவம்போம்!

முறியடிக்க உதவும் சரியான மாற்றுகள் தாமா துக்குத் தண்டனை, ஜெயிலட்ைப்பு, புத்தக் கொலைகள் எல்லாம்??

அவனால், விடை காண முடியாது, அவன் சிந்தனை அதற்கு மேல் வேலை செய்யாதுதான்.

தான் தனது கடமையை நிறைவேற்ற ஒருவனைத் துக்கிலேற்றியாக வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் அவனை சித்திரவதை செய்து கொண்டிருந்தது. ஒரு வாரம் பாரமான தினங்களாக உருண்டு, மனப்பழுவை அதிகமாக்கும் ஒரே நாளாகி, அதுவும் தேய்ந்து ஒரே இரவு என்ற கடைசிப் படியில் கலந்தது. . . . .

அந்த இரவு தாங்க முடியாத சோதனைக் காலம் - சாகப் போகிற குற்றவாளிக்கும் அவனைக் கொல்ல வேண்டிய பரான அவனுக்கும். x

குற்றவாளி துக்கமற்று, நாலு சுவர்களுக்குமிடையே, அங்குமிங்கும் அலைந்தான். ஒரே ஒரு இரவுதான் இனி அவனது வாழ்வின் எல்லை. வாழ்வு இயல்பான தனது எல்லையைத் தொடுமுன்பே சட்டமும் சந்தர்ப்பமும் செய்த சதிகளினாலே அவனது காலம் திடீரென்று சேதம் செய்யப்படுகிறது. அவன் உள்ளத்து அரங்கிலே எத்தனை எத்தனையோ எண்ணக் கூத்துகள். நிறைவேறாது - கிட்டவே கிட்டாது - என்று உறுதியாகத் தெரிந்தாலும் கூட மனம் நீள விடுகிற அல்ப ஆசைக் கனவுகள்... அவனுக்கு அமைதி யில்லை. . . .

‘கொலையை வயிற்றுப் பிழ்ைப்புக்கு வகை செய்யும் வாணிபமாக ஏற்றுக் கொண்டுள்ள குடும்பத்தில் பிறந்த கொலைகாரனுக்கும் அமைதியில்லை. இரவில் உணவு செல்லவில்லை, பசி இருந்தது. சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து, ஒரு கவளம் சோறை உள்ளே தள்ளியதுமே யாரோ தொண்டையைப் புடித்து இறுக்குவது