பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புண்ணியம் ஆம் பாவம்போம்!

6

8

•r

ஐய்யய்யோ! இவனுக்கு என்ன?... என்ன இப்படி... ‘இரத்தக் கொதிப்பாக இருக்குமோ?! ‘காக்காவலிப்பு கண்டா வந்திருக்குமோ!’

‘பலவீனம்” ‘இது தான் முதல் தடவை. பயந்திருப்பான். பாவம் எப்பவுமே அவன் ஒரு மாதிரி...”

‘தண்ணி கொண்டா... தண்ணி இரும்பைக் கையிலே கொடுத்துப்பாருங்க, சாவிக் கொத்து இருந்தாலும் போதும். காக்கா வலிப்புக்கு...’

ஆஸ்பத்திரிக்கு டாக்டரய்யா. ஐயோ பாவம்’ அவனைப் பற்றி பலர் பலவிதம் பேசினார்கள். யார் என்னசொல்கிறார்கள் என்று அறியும் துடிப்பு அவனுக்கு இல்லை. அவன் உயிர்த் துடிப்பே ஒடுங்கி விட்டது. மனிதத்தன்மையை இழந்து விடவேண்டும் என்று கூறுகிற வாழ்வின் ஒட்டத்திலே நிமிர்ந்து நிற்க முடியாமல், மனச்சாட்சியால் கால்வாரி விடப்பட்ட அந்த மனிதனுக்கு ‘மாரடைப்பினால் மரணம் என்று முடிவு கூறினார் டாக்டர்.