பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. எங்கும் போகாதவனின்

அற்புத யாத்திரைகள்

அவன் எப்பொழுதம் அதே இடத்தில் தான் காட்சி அளித்தான். அங்கேயே முளைத்தெழுந்து நிலைபெற்று விட்டது மாதிரி. சாப்பாட்டு நேரம் தவிர, இதர நேரங்களில் எல்லாம், அவன் அங்கேயே உட்கார்ந்திருப்பான். அனைத்தையும் மெளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பிள்ளையார் போல. -

அந்த இடம் வசதியாக இருந்தது. நிழலுக்கும் காற்றுக்கும் பஞ்சம் இல்லை. அவனுக்கும் சாப்பாட்டுக்குக் கவலை இல்லை. வேலை செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை. பொழுது போக வேண்டுமே? அதற்காக, ரஸ்தாவைப் பார்த்தபடி, அதே இடத்தில் உட்கார்ந்திருப்பான்.

அது போக்குவரத்து மிகுந்த பெரிய ரஸ்தா ஒன்றும் இல்லை. ஊரும் சுமாரான ஊர்தான். அவனும் சாதாரண ஆசாமி என்று சொல்லப் படவேண்டிய தோற்றமே கொண்டிருந்தான். -