பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 73

வெற்றிலை போட்டுக் கொள்ளுவாள். வெட்டப்பட்ட கம்புகளையும் குச்சிகளையும் சேர்த்து ஒன்றாக்கி, நாரை வைத்துக் கட்டாகக் கட்டி, தலைமீது சிரமப்பட்டு தூக்கி எடுத்துக் கொண்டு, சுமந்து வருவாள். சுமை தலையை அழுத்த, பசி வயிற்றைக் கிள்ள, களைப்பு உடலைத் துன்புறுத்த வீட்டிலே போய் இனிமேல் கஞ்சி காய்ச்சனுமே என்ற நினைப்பு மனசை அழுத்த அவள் நடந்து வருவாள். அப்போது அந்தி நேரம். மேல் வானம் ரொம்ப அழகாக இருக்கும். சிவப்பும் ரோஸும் தகத்தகப் பொன் மயமும்... ஆகா, அதை எத்தனை பேர் ரசிக்கப் போறாங்க?...

அவன் சிந்தித்தான்: ‘வாழ்க்கை எப்படி எப்படியோ அமைந்து கிடக்கு. மனுஷங்க எப்படி எப்படி எல்லாமோ வாழ்கிறாங்க. ஒரு ஊரிலே, கொஞ்சம் பேரு சேர்ந்துக்கிட்டு, தனி இனமா ஒதுங்கி வாழனும்; நம்ம வீடுகள் எல்லாம் பெரிய கோட்டைக்குள்ளே இருக்கணும்னு திட்டமிட்டு, அப்படியே மண்ணாலே கோட்டை வளைஞ்சுக்கிட்டாங்க. நாங்க கோட்டைப் பிள்ளைமார்னு சொல்லிக்கிட்டாங்க. அந்தப் பெருமை பெண்களை கைதிகள் போல வ்ாழச் செய்யும் ஏற்பாடாகி விடது. ஆண்கள் வெளியே வரலாம். ஊர் சுற்றலாம், போகலாம். பெண்கள் - சிறுமிகள் கூட கோட்டைக்கு வெளியே வர முடியாது. அங்கேயே பிறப்பு, வளர்வது, கல்யாணம் ஆவது, பிள்ளை பெறுவது, சாவது எல்லாம். வெளியேயிருந்து இதர இன ஆண்கள் உள்ளே போகக்கூடாது. அனுமதி பெற்று, பெண்கள் போய் வரலாம். யோசிச்சுப் பாரு. இயல்புக்கு மாறுபட்ட வாழ்க்கை வாழ நேர்ந்துவிட்ட பெண்கள், சிறுமிகள் ஒடும் நதியை, திரியும் மிருகங்களை, மனிதர்களை, கடைத் தெருக்களை, திருவிழாக் கூட்டத்தை, ரயில் வண்டித் தொடரை - எதையும் பார்த்ததில்லை. பார்க்க முடியாது. என்ன வாழ்க்கை அது!"