பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் *75

மன்னரில் ஒருவனாகவே கூட இருந்திருக்கலாம். அது சாத்தியமில்லை என்று நீர் எப்படிச் சொல்ல முடியும்?” பாண்டியன் படை வீரர்களில் ஒருவனாக இருக்கக் கூடும். சாதாரணக் குடிமகனாகவே இருந்திருக்கலாம். நாளங் காடியில் சாமான்கள் விற்கிறவனாகவோ, வாங்குகிற வனாகவோ... கொற்கைக் கடலில் முத்துக் குளிப்பவனாக, அல்லது கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ள முத்தக்களை விற்பனை செய்யும் வணிகனாக... ஏன், கொள்ளைக் காரனாகக்கூட இருந்திருக்கலாம். அவனுக்கும் தாத்தா... சிருஷ்டியின் துவக்கத்திலிருந்து பின்னி வருகிற அறாத சங்கிலியின் முடிவற்ற கண்ணிகள் தானே இன்று திரிகிற மனிதப் பிறவிகள்? ஆகவே, ஒவ்வொருவனின் முன்னோனும் எல்லாக் காலத்திலும் இருந்திருக்க வேண்டும் தானே?

அவன் மனம் வேறு கதியில் ஓடியது. தாண்டிக் குதித்தது.

இப்போது இங்கே ரொம்ப அமைதியாக இருக்கிறது. எங்காவது கலாட்டா நடந்து கொண்டிருக்கும். எவனாவது எவளையாவது குத்திக் கொன்றிருப்பான். ஏதாவது ஒரு காரணத்தினால் ஒருவன் தற்கொலை செய்வதில் முனைந் திருப்பான். இயல்பான சாவு செத்தவன் வீட்டில் எடு - கெடத்து என்று பரபரப்பும், அழுகையும் புலம்பலும் இருக்கும். பல இடங்களில், இரவில் பூத்த அல்லி மலர்கள் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கும். வாய்க்கால் ஒரத்துச் செவ்வரளிப் புதர்களில் சிவப்பு நட்சத்திரங்களாய் பூக்கள் ஒளிரும். ரயில்கள் ஒடிக்கொண்டே இருக்கும். பஸ்கள், சைக்கிள்கள், கார்கள், லாரிகள், ஸ்கூட்டர்கள் வகையரா எங்கெங்கோ, எவர் எவராலோ இயக்கப்பெற்று, அலையும். எங்காவது மழை பெய்து கொண்டுதாணிருக்கும். மழையில் நனைகிறவர்களும் இருப்பார்கள். ஆபீஸ்களில் வேலைகள் நடக்கும். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் படுத்திருப்பார்கள்.