பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

‘நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் , ‘எல்லோர்க்கும் நன்றாம் பணிதல்’, ‘அடக்கம் அமரருள் உய்க்கும் போன்ற குறள் வரிகளுக்கு சிறந்த எடுத்துக் காட்டாகவும், எளிமைக்கும், தன்னடக்கத்திற்கும் இலக்கண மாகவும் திகழ்ந்து வருபவர் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள்.

தனது 16 வயதில் எழுத ஆரம்பித்த திரு. வல்லிக் கண்ணன் தமது 8 வயதிலும் எழுத்துப் பணியைத் தொய்வில்லாது தொடர்ந்து வருகிறார். எழுத்தையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்ட இவரது சிந்தனைகள் பலருக்கும் வாழ வழிகாட்டுவதாக அமைந்துள்ளன. இவரது படைப்புகள் வெறும் பொழுதுபோக்கு நூல்களாக இல்லாமல், எக்காலத்துக்கும் உகந்த கருத்துக் கருவூலங்களாகவும், புத்துணர்வையும், பகுத்தறிவையும் ஊட்டுவனவாகவும் அமைந்துள்ளன. •.

இவர் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, சிறந்த படிப்பாளி யும் கூட. அண்மையில் வெளிவந்த புதிய இளம் எழுத்தாளர் களின் படைப்புகளையும் கூடப் படித்திருப்பார். படித்த கையோடு அவர்களுக்குப் பாராட்டுக் கடிதமும் எழுதி யிருப்பார். அடுத்தவரை உற்சாகப்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே! -

‘காய்தல் உவத்தல் அகற்றி”, விருப்பு வெறுப்பின்றி திறனாய்வு செய்யும் இயல்பினர் இவர். இத்தகு சிறந்த அறிஞர் திரு. வல்லிக்கண்ணன் அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை வெளியிடுவதில் பத்மா பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது. வெளியிட அனுமதி தந்தமைக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. - அன்புடன், U.S.S.R. G. 5l regs

பத்மா பதிப்பகம்