பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78*, புண்ணியம் ஆம் பாவம்போம்!

இப்படி தன்னுள்தானே சொக்கிப் போவது பாலுப் பிள்ளையின் இயல்பு ஆகிவிட்டது. பலப் பல வருடங்


தாமிரவர்ணிக் கரை மீது இருந்த மீனாட்சி புரத்தில் அவர் வசித்த காலமே மிக இனிமையான காலம் - அவருடைய வாழ்க்கையின் பொற்காலம் ஆகும் என்று பாலுப்பிள்ளை கருதினார். அந்நாட்களின் நினைவுகளை அசை போடுவதிலே அவருக்கு அலுப்பு சலிப்பு ஏற்படுவதேயில்லை.

மீனாட்சிபுரம், ஆற்றை ஒட்டி அமைந்த அழகான ஊர். ஆற்றில் பெரும் மணல் பரப்பு. பார்வைபடும் இடம் எல்லாம் மணல். பக்கத்திலேயே கைலாசபுரம். ஆற்று மணலில் தைப் பூச மண்டபம். அதன் மகிமையே தனி. அந்தக் காலத்தில் பிள்ளை இளைஞனாக இருந்தபோது, அங்கேதான் பெரிய பெரிய தலைவர்களின் கூட்டங்கள் நடைபெறும். ஜவகர்லால் நேரு, கமலா நேருவுடனும் இந்திராவுடனும் அந்த மணல் பரப்பில், தைப்பூச மண்டபத்தில் அமைக்கப் பட்டிருந்த விசேஷ மேடையில் தோன்றி மக்களை மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்த்திய காட்சியை மறக்க முடியுமா? அது நடந்தும் அம்பத்து மூணு அம்பத்து நால வருஷம் இருக்குமே! என்ன கூட்டம் எவ்வளவு ஜனங்கள்...

இப்படி அவருடைய நினைவு ஜிலு ஜிலு என்று நகர்ந்து கொண்டிருக்கும். -

ஆற்றில் மணல்பரப்பு அவருடைய வாழ்க்கையில் மிக ஒட்டி உறவாடிய ஒரு களம் ஆக இருந்தது அந்தக் காலத்தில். அவரும் அவரைப் போன்ற இளவட்டங்களும் அங்க சடுகுடு விளையாடிக் களிப்பார்கள். மாலை நேரங்களில் - நிலாக் காலத்தில் இரவில் வெகு நேரம்வரை மணலில் அமர்ந்து மனம் மகிழப் பேசி பொழுது போக்குவார்கள். அப்போது