பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 79

ஒரு வாரப் பத்திரிகையில் ஒருவர் யோகாசனப் பயிற்சி பற்றி சுவாரஸ்யமாகக் கட்டுரை எழுதி வந்தார். அதைப் படித்த பாலுப்பிள்ளையும், இரண்டு மூன்று நண்பர்களும் ஆர்வத் தோடு ஆசனங்கள் செய்து பழகினார்கள். அதற்கும் ஆற்றங் கரை மணல் வசதி செய்து கொடுத்தது.

பாலுப்பிள்ளை, அவரைக் காணவருகிறவர்களிடம் எல்லாம் இந்தப் பெருமைகளை அளப்பது உண்டு. ‘திரும்பவும் மீனாட்சிபுரம் வாழ்க்கை சித்திக்குமா என்று என் மனம் ஏங்குகிறது என்று முத்தாய்ப்பாகச் சொல்லுவார் அவர்.

சில வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்த சுயம்புலிங்கத்திடம் பாலுப்பிள்ளை இதைச் சொன்னார்.

சுயம்பு சிரித்தார். கிண்டலாக சொன்னார். ‘மீனாட்சி புரத்தில் திரும்பவும் வாழ்கிற வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கலாம். ஆனால், மீனாட்சி புரம், கைலாசபுரம், சிந்து பூந்துறை, கொக்கிரகுளம் எல்லாமே - தாமிர வர்ணியை அடுத்துள்ள திருநெல்வேலி வட்டாரத்து ஊர்கள் எல்லாமே இப்ப பழைய ஊர்களாக இல்லையே என்ற ஏக்கம் உங்களைத் தொத்திக் கொள்ளும்!”

‘அதென்ன அப்படிச் சொல்லிப் போட்டிக?’ என்றார் பிள்ளை. கொக்கிரகுளத்துக்குப் போகிற. சாலையில் ஓங்கி வளர்ந்த மருதமரங்கள் பற்றியும், வீரராகவபுரத்தில் இந்துக் கல்லூரியை ஒட்டி மதுரை ரோடின் அழகு, அங்கு நின்ற பெரிய பெரிய மரங்கள், பக்கத்து மாந்தோப்புகள் பற்றியும், சிந்து பூந்துறையின் ரோஜாத் தோட்டங்கள் பற்றியும் தன்னை

மறந்த லயத்தோடு பேசினார்.

‘நீங்க நம்ம ஊர்ப்பக்கம் வந்து எத்தனையோ வருஷங்கள் ஆச்சு... இப்ப ஒரு தடவை கட்டாயம் வந்து