பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புண்ணியம் ஆம் பாவம்போம்!

பாருங்க!’ என்று அழுத்தமாகக் கூறிவிட்டுப் போனார்

சுயம்பு.

பாலுப்பிள்ளை அப்படி வரத்தான் செய்தார். பகீரென்றது அவருக்கு. திருநெல்வேலி ஜங்ஷன் நாகரிகப் பெரும் நகரமாக வளர்ந்திருந்தது. மருதமரங்கள், மாந்தோப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தன. எவ்வளவு கடைகள்; எத்தனை எத்தனை பஸ்கள் என்ன கூட்டம் சதா தேனடை யில் மொய்க்கும் ஈக்கள் மாதிரி, புற்றுகளில் சஞ்சரிக்கும் எறும்புகள் போல, ஜனங்கள் நெருக்கி மோதி சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்... -

இதைவிட அவருக்கு அதிர்ச்சி தந்தது ஆற்றங்கரை, அழகு குலைந்து, மணல் பரப்பு மறைந்து, மண்டி வளர்ந்த நீர்க்கருவையும், எருக்கஞ் செடிகளும், இதரவகைச் செடிகளுமாக, ஆறு ஆறாகவே இல்லையே? தைப் பூச மண்டபம் தனது பொலிவை இழந்துவிட்டு, வேலிகள் கம்பிகள் போர்த்து என்னமோ மாதிரி இருந்தது. எங்கும் குடிசைகள், சாக்கடை நீரோட்டம், அசிங்கம்...

சகிக்க முடியவில்லை அவரால். மீனாட்சிபுரம், கைலாசபுரம், சிந்து பூந்துறை முதலிய சிற்றுார்கள், தத்தமது தனித்துவம் இழந்து, ஜங்ஷன் என்ற நாகரிக மையத்தின் நீண்டு பரவிய அங்கங்களாக மாறியிருந்தன. -

மீனாட்சிபுரம் ஆற்றங்கரையில் அவர் மணலைத் தேடினார். மணல் பரப்பு எங்குமே இல்லை. கொக்கிர குளம் பாலத்தின் கீழே ஆறு சாக்கடை போல் தேங்கி நின்றது. நகரச் சாக்கடை நீர் பல இடங்களில் வந்து ஆற்றில் கலந்து கொண்டுமிருந்தது. - - -

பாலுப்பிள்ளை பெருமூச்செறிந்தார். அவருக்குப் பழக்கமான ஆற்றங்கரைப்பாதை வழியே நடந்து பார்த்தார்.