பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 8

பல இடங்களில் பாதை தூர்ந்துபோய் விட்டது. தடமே இல்லை.

ஒவ்வோர் ஊருக்கும் பஸ் போக்குவரத்து ஏற்பட்டு விட்டதால், நடந்து போகிற பழக்கத்தை மனிதர்கள் துறந்து விட்டார்கள். அதனால், ஆற்றங்கரை பாதைக்கு அவசியம் இல்லாது போய்விட்டது. முட்செடிகள் மண்டி விட்டன.

பாலுப்பிள்ளை சிரமப்பட்டு நடந்து பார்த்தார். முன்பு அழகுடன் தென்பட்ட சிற்றுரர்கள் - ஆற்றை ஒட்டியுள்ளவை - இப்போது அழகு குலைந்தே காணப்பட்டன. எங்கும் நீர்க்கருவை மரங்கள். ஆற்றில் மணல்வெளி அருகிப்போச்சு, புதர்புதராக என்னென்னவோ செடிகள் கும்பலிட்டு வளர்ந்து ஆற்றை அதன் அழகை கெடுத்துக் கொண்டிருந்தன.

பாலுப்பிள்ளை மனவேதனையோாடு பட்டணம் திரும்பினார். என்றாலும் அவர் தனது ஆசையை, நினைப்பை துறந்துவிடத் தயாராக இல்லை. தாமிரவர்ணி ஆற்றோரத்து ஊர் ஒன்றில் தனது வாழ்வின் கடைசிக் கட்டத்தை அமைதியாய், சந்தோஷமாய் கழிக்க வேண்டும் என்ற ஏக்கம் அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது.

அவருக்கும் வயது ஆகிவிட்டது. இனிமேலும் உழைக்க முடியாது. உழைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்ற கட்டம் வந்தது. -

நாகரிக நகரத்தின் எல்லைகளைத் தாண்டி, முழுவதும் கிராமத்தன்மைகளையே பெற்றிருக்கும், ஒரு ஊரை தாமிர வர்ணிக் கரையோரச் சிற்றுரை - அவர் தேர்ந்தெடுத்தார், மனைவியோடு அவ்வூருக்கு வந்து சேர்ந்தார்.

பாலுப்பிள்ளை பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண் டிருந்த காலத்தில், அந்த ஊரிலிருந்து சில பையன்கள் ஒத்தை