பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புண்ணியம் ஆம் பாவம்போம்:

மாட்டு வண்டி"யில் பாளையங்கோட்டைக்கு வந்து கல்வி கற்றார்கள். அவர்களில் சிலபேர் சுறுசுறுப்பாக இருந்தது இல்லை. அப்போதெல்லாம் தமிழ்பண்டிதர் சுவாரஸ்யமாகச் சொல்லுவார்:

“காலையிலே எழுந்து, ஆற்றில் குளித்துவிட்டு, மலையாள மரவையில் பழையசோறை எடுத்துப் போட்டு, உங்க ஊர் கட்டித் தயிரை ஊற்றி, திருகப் பிசைஞ்சு, சுண்டக்கறியும் வச்சுக்கிட்டு சாப்பிட்டால் தேவா மிர்தமா இருக்கும். அப்படிச்சாப்பிட்டுப் போட்டு பள்ளிக் கூடத்துக்கு வந்தால், தூக்கம் வரும். பின்னே படிப்பா வரும்?” என்பார்.

பாலுப்பிள்ளை இதை அடிக்கடி எண்ணி ரசிப்பது உண்டு. -

அந்த ஊரும் பிள்ளையின் நினைவில் நிலைபெற்றிருந்த குளுகுளு ஊராக இல்லை இப்போது. முன்புமோருக்கும் தயிருக்கும் பிரசித்தி பெற்றிருந்த ஊரில், இப்போது பாலும் மோரும் கிடைப்பதே சிரமமாக இருந்தது. இரவில் ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் பண்ணையில் கொண்டு போய், மாடுகளைக் கறந்து, பால் முழுவதையும் அங்கேயே விற்று விடுவார்கள். கிராமங்களில் கிடைக்கிற பால் பூராவும் கேன் கேன் ஆக நகரங்களுக்கு - ஒட்டல்களுக்குப்போய் விடுகிறது. கிராமத்தில் பால் தட்டுப்பாடு - மோர் கிடைப் பதில்லை - தெய் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.

அங்கே வந்து சேர்ந்த இரண்டு நாட்களிலேயே பாலுப்பிள்ளை இதை உணர்ந்து கொண்டார். வீட்டோடு மாட்டை நிறுத்தி, பால் கறந்து, சில வீடுகளுக்கு வாடிக்கை யாகப் பால் ஊற்றுகிற ஒர் அம்மாளிடம் பாலுக்கு ஏற்பாடு செய்தார். -